லிபியா முன்னாள் பிரதமரின் ஜனாஸா ஆற்றிலிருந்து மீட்பு
லிபியாவின் முன்னாள் எண்ணெய் வள அமைச்சர் சுக்ரி ஹானிம் டனுபி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். வியென்னா ஊடாகப் பாயும் டனுபி ஆற்றிலிருந்து கண்டெடுத்த ஹானத்தின் உடலில் எந்தவிதமான காயங்களோ அல்லது துன்புறுத்தப்பட்டமைக்கான அடையாளங்களோ இல்லையென பொலிஸ் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
வியென்னாவைத் தளமாகக் கொண்டியங்கும் நிறுவனமொன்றில் ஹானிம் (வயது 69) ஆலோசகராக தொழில் புரிந்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அவர் வீட்டிலிருந்து வெளியில் சென்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் லிபியத் தலைவர் கடாபி கொல்லப்பட்ட பின்னர் லிபிய அரசு வீழ்ச்சி கண்டதுடன் ஹானிம் தோற்கடிக்கப்பட்டார்.
லிபியாவின் பிரதமராக 2003 இலிருந்து 2006 ஆம் ஆண்டு வரையும் பின் 2011 ஆம் ஆண்டு வரை எண்ணெய் வள அமைச்சராகவும் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹானிம் உடைகள் கண்டெடுக்கப்பட்ட போதிலும் அவரைத் தனிப்பட்ட ரீதியில் அடையாளப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. எனினும் அவர் தொழில் புரிந்ததாக எதிர்பார்க்கப்படும் கம்பனியே அவரை அடையாளப்படுத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வியென்னாவிலுள்ள பொழுதுபோக்கு விளையாட்டு மைதானத்திற்கு அருகிலேயுள்ள பாலத்திற்கு கீழேயே இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகவியலாளரொருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment