பாடசாலைகளில் பாலியல் கல்வியை இங்கிதமாக கற்பிக்கும் தீர்மானம் - தோல்வியில் முடிந்தது
பாலியல் சுகாதாரம் தொடர்பாக மாணவர்களைத் தெளிவூட்டும் வகையில் சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை எட்டு மாகாண சபைகள் நிராகரித்துள்ளன.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதியை சப்ரகமுவ மாகாண சபை மாத்திரம் வழங்கியுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் லலித் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதியுதவியின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான கல்வியினை வழங்கும் நோக்கில் சுகாதார அமைச்சினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பாடசாலை மாணவர்களுக்கு பாலியலுடன் தொடர்புபட்ட விடயங்களை இங்கிதமாக கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான விசேட பாடத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும் இந்த வேலைத்திட்டத்தினை எட்டு மாகாண சபைகள் நிராகரி்த்துள்ளதை அடுத்து, இந்தக் கல்வித் திட்டத்தின் ஊடாக எவ்வித பயனும் இல்லை என சுகாதார பிரதி அமைச்சர் லலித் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment