கடன் வாங்க வெட்கம் இல்லையா..? அரசாங்கத்திடம் கேட்கிறது ஐ.தே.க.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதனைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் 3 நிபந்தனைகளுக்கு இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையை தவிர்ப்பதற்காக, முதலில் அரசாங்கம் நாணய பெறுமதியை குறைத்திருந்தது. முதல் 3 சதவீதமாகவும், பின்னர் முழுமையாகவும் இந்த பெறுமதி இறக்கம் மேற்கொள்ளப்பட்டது. இதன்பின்னர் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டன.
தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டன. இவ்வாறு அரசாங்கம் மூன்று விடயங்களை மேற்கொண்டுள்ளது. எனினும் இது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்காக இதனை மேற்கொள்ளவில்லை என அரசாங்கம் தெரிவித்து வந்தது.
ஆனால் தற்போது அதனை வெட்கம் இல்லாமல் சர்வதேச நாணய நிதியத்திடம் கையெழுத்திட்டு வழங்குவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச த சில்வா தெரிவித்துள்ளார். உடை அணிந்துக் கொண்டுதான் மக்களுக்கு அவர்கள் இவ்வாறு பொய் கூறுகிறார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் பின்னால் ஓட வேண்டிய நிலை, அரசாங்கத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ளதாக ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் அதிகமான அன்னிய செலாவணி இருப்பதாக அரசாங்கம் கூறி வருகின்ற போதிலும், தற்போது இந்த அன்னிய செலாவணி விகிதம் மிகவும் குறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுளளார்.
பொருளாதாரம் பின்னடைந்து செல்கின்ற போதும், அரசாங்கம் பொய்கூறி வருவதாக தெரிவித்த அவர், தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் பின்னால் ஓட வேண்டிய சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment