தேசத்துரோகிகளுக்கான தண்டனையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்குங்கள் - சம்பிக்க
தேசத்துரோகிகளுக்கு வழங்கும் தண்டனையினை கூட்டமைப்பினருக்கு வழங்குங்கள் என சம்பிக்க ரணவக்க அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவுடன் சேர்ந்து நாட்டை காட்டிக்கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு எதிராக அரசியலமைப்பின் 157வது பிரிவின் பிரகாரம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் விடயத்தில் இனியும் பொறுத்திருக்காது தேசத்துரோகிகளுக்கு வழங்கும் தண்டனையை வழங்க வேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை நிறைவேறுவதற்கு த.தே.கூ எமது நாட்டைக் காட்டிக் கொடுத்ததுள்ளது இது தேசத்துரோகமான செயற்பாடாகும். நாட்டில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற போர்க் குற்றங்கள் குறித்து இராணுவத்திடம், கடற்படை மற்றும் ஏனைய படைகளிடம் உள்நாட்டு விசாரணைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.
அத்துடன் ஜெனீவாவின் தீர்மானங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் காணப்படுகின்ற அதிகாரப்பகிர்வு போன்ற தேசிய அரசியலுடன் தொடர்புபட்ட விடயங்களை உள்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை.
இந்த வேளையில் அமெக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு விடயத்தை உறுதியாக கூற விரும்புகின்றோம். இலங்கை ஒரு சுயாதீன நாடு எனவே, இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிட அதிகாரம் கிடையாது அதனையும் மீறி தலையிடுவது அநாகரிகமான செயலாகும்.
அத்தோடு உள்நாட்டில் அரசியல் தீர்வை ஏற்படுத்துதல், வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற விடயங்கள் குறித்து பேசுவதற்கு எந்தவொரு அந்நிய நாட்டிற்கும் உரிமையில்லை. எமது நாட்டிலேயே பல நீதிமன்றங்கள் உள்ளன. அத்தோடு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றம் உள்ளது. இவற்றைவிட மிஞ்சிய சக்தியாக சர்வதேசத்தை இலங்கை அரசு ஒரு போதும் கருதாது.
எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்நாட்டில் இருந்து கொண்டே பாரிய துரோகத்தனங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இவர்கள் விடயத்தில் அரசாங்கம் இனியும் பொறுமைகாக்கக் கூடாது. நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களை வெளிப்படையாக தண்டிக்க வேண்டும்.
இல்லையெனில் நாட்டைப் பாதுகாப்பதில் நாம் தோல்வி கண்டு விடுவோம். எனவே அரசியலமைப்பின் 157வது பிரிவின்படி தேசத்துரோகிகளுக்கு என்ன தண்டனை வழங்கப்படுகின்றதோ அதனையே சம்பந்தன் குழுவினருக்கும் வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐயா நல்லா கொடுங்க , முதலாவது மண்டையன் குழுத்தலைவன்
ReplyDeleteசுறா பிரேமா சண்டியனுக்கு கொடுங்க , பிறகு சம்பந்தமில்லாதவருக்கு கொடுங்க