அப்துல் கலாமா..? ஹமீத் அன்ஸாரியா..??
இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலின் பதவி காலம் ஜூலை மாதத்துடன் முடிகிறது. புதிய குடியரசுத் தலைவர் ஜூலை 25ல் பதவியேற்க வேண்டும். அதற்கேற்ற வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரமாக உள்ள காங்கிரஸ் இப்பதவிக்கு தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை முன்னிறுத்த அதிக வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குடியரசுத் தலைவரை போட்டியின்றித் தேர்வு செய்ய காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஆனால் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்னாள் குடியரசுத் தலைவரும் ஏவுகணை தொழில்நுட்ப வல்லுநருமான அப்துல் கலாமை மீண்டும் நிறுத்த வேண்டும் என்று பலகட்சிகளும் வலியுறுத்தி வந்தன, ஆனால், இத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி கலாம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அனைவரும் தன்னை ஏக மனதாக (போட்டியின்றி)த் தேர்ந்தெடுப்பதாக இருந்தாலே அப்துல்கலாம் சம்மதிப்பார் என்று கூறப்படுகிறது.
மேலும், காங்கிரஸ் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோரிடம் விரைவில் சோனியா பேசுவார் என்று தெரிகிறது. இதற்கிடையில், காங்கிரஸ் சார்பில் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரியை வேட்பாளராக அறிவிப்பது குறித்து காங்கிரஸ் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
மேலும், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை குடியரசின் தலைவராக ஆக்கலாமா என்பது குறித்தும் காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. இவர்கள் இருவரும் வேண்டாம் என்று கூட்டணி கட்சிகள் கூறினால், அனைவரது ஆதரவையும் பெறும் வகையில் மக்களவைத் தலைவர் மீராகுமாரை களத்தில் இறக்கலாமா என்பது குறித்தும் காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. எனினும், முதல்பெயராக ஹமீத் அன்சாரியே காங்கிரஸின் (சோனியாவின்) கருத்தில் உள்ளார்.

..............................................................
குடியரசுத் தலைவர் வேட்பாளராக அப்துல் கலாமை சமாஜ்வாடி கட்சி ஆதரித்தால் பாஜகவும் அப்துல் கலாமுக்கு ஆதரவு வழங்கும் என பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் '' மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியையோ அல்லது துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியையோ குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ள முடியாது.
பிரணாப் முகர்ஜி காங்கிரசைச் சேர்ந்தவர். ஹமீது அன்சாரி குடியரசுத் தலைவர் பதவிக்குப் பொருத்தமற்றவர் எனவே இவ்விருவரையும் ஏற்றுக் கொள்ள முடியாது. திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் அப்துல் கலாமை ஆதரித்தால் பாஜகவும் அப்துல் கலாமுக்கு ஆதரவு வழங்கும் '' என்று சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

பிரணாப் முகர்ஜி மற்றும் ஹமீது அன்சாரி இருவரில் ஒருவர் குடியரசுத் தலைவர் ஆவதற்கு திமுக தலைவர் கருணாநிதியும் சம்மதம் தெரிவித்து இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் இரு தலைவர்களையும் பாஜக நிராகரித்து இருப்பது குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாரு ஜனாதிபதியாக வந்தாலும் இந்தியாவில் முஸ்லிம் உம்மாவிற்கு விமோசனம் கிடையாது.அப்துல் கலாம்
ReplyDeleteயாராவது சாமியார்களின் காலடியில் கிடப்பார்.அன்சாரி எப்படியோ தெரியவில்லை .
Daoud Tharik