Header Ads



சம்மாந்துறை முஸ்லிம் டாக்டர்களின் சாதனை

ஈரலுடன் தொடர்புபடும் விதத்தில்  சிறுநீரகத்தில்  வளர்ந்திருந்த கட்டியொன்றை ஆறு மணி நேர தொடர் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை டாக்டர்கள் சாதனை  புரிந்துள்ளதாக வைத்திய அத்தியட்சகர் ஏ.இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார். சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யூ. எம்.சமீம் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இச் சிறுநீரக சத்திர சிகிச்சையில் டாக்டர் எம்.றஜப் மற்றும் டாக்டர்களான ஷியாட், மதீகா ஆகியோரும் பங்கெடுத்துள்ளனர்.

இது பற்றி சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் கூறுகையில்,

நூற்றுக்கும் அதிமான பெரிய, சிறிய சத்திர சிகிச்சைகளை நாம் மேற்கொண்ட போதிலும் அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான தொரு சத்திர சிகிச்சை இதுவரை செய்யப்படவில்லை. சிறுநீரகத்தில் வளர்ந்திருந்த இக் கட்டி பெரு நாடி, நாளம் ஊடாகச் சென்று ஈரல் வரை சென்றிருந்தது. ஆபத்தான  நிலையை நோக்கி நகரக் கூடிய வாய்ப்பிருந்தும் நாம் இதனைச் செய்து முடித்தோம்.

வசதிகள் குறைவாக உள்ள நிலையிலும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அதிதீவிர  சிகிச்சைப் பிரிவின் உதவியை இதற்கெனப்  பெற்றுக் கொண்டோம்.  இச் சத்திர சிகிச்சையின் இன்னும் ஒரு சிறப்பம்சம்  மேலதிக இரத்தம் எதுவும் நோயாளிக்குப் பாய்ச்சாமலே  இந்த சத்திர  சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சாதாரணமாக இவ்வாறான சத்திர சிகிச்சையின் போது அதிகளவு இரத்தம் வெளியேறுவது  இயல்பு. அச்சந்தர்ப்பத்தில் மேலதிக இரத்தம் பாய்ச்சுவோம். இரத்தம் அதிகளவில் வெளியேறாத முறையொன்றை இதன் போது பயன்படுத்தியதால் மேலதிக இரத்தம் தேவைப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளி முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாக வைத்திய அதிகாரி ஏ. இஸ்ஸடீன் தெரிவித்துள்ளார். முதற் தடவையாக இவ்வாறானதொரு சத்திர சிகிச்சை யொன்றினை சம்மாந்துறை வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்காக பிரதேச புத்திஜீவிகள் சத்திர சிகிச்சை நிபுணர் சமீமைப் பாராட்டியுள்ளனர்.

3 comments:

  1. முஸ்லிம்களாக இருந்தும் இறைவனை புகழும் பழக்கம் நம்மவரிடம் அறவே இல்லை.தனக்கு அறிவையும் திறனையும் தந்த இறைவன் அல்லவா அவரின் முதல் குரு?நம்மவர்களுக்கு தொளுகையுமில்லை,ஈமானுமில்லை,காசுபணம் வந்தால் அனைத்தையும் மறந்துவிடுவார்கள்.ஒரு எல்லாவற்றையும் சேர்த்து இறைவனை நினைக்கவரும்,அதுதான் அவரது இறுதி நாள்.இறைவனை பயந்துகொல்லுங்கள், அவன் கட்டளைப்படி நடந்துகொள்ளுங்கள்.

    ReplyDelete
  2. nanpar hakeem unkalukku enathu nanrikal.allah quraani:neenkal allahwin arud kodaikalukku nanri selutthinaal mealum walankuwaan.maaru seythaal awanin thandanai kadinamaanathu.(14,8)

    ReplyDelete
  3. Al hamthulillah
    All praise to be Almighty Allah..,

    wish you all the best

    ReplyDelete

Powered by Blogger.