Header Ads



மே தின சிறப்புக்கட்டுரை

எஸ். எல். மன்சூர் (கல்விமாணி)

மே மாதம் முதலாம் திகதி வந்துவிட்டால் தொழிலாளர் தினமாகும். தொழிலுக்கான ஊதியத்தை நியாயமான முறையில் பெற்றுக் கொள்ளவும், மனிதாபிமான முதலாளித்துவ சமூகத்தைக் கட்டியெழுப்பவும் இன்றைய மேதினம் அன்று உலகின் பலநாடுகளில் உருவாக்க காரணமாக அமைந்திருந்தமை யாவரும் அறிந்தவைதான். ஆனால் இந்த மேதினம் உண்மையான சமூகத்தின் கண்ணாய் அமைந்துள்ள தொழிலாளர் வர்க்கத்தை சரியான முறையில் அடைந்துள்ளதா என்றால் யோசிக்க வேண்டிய விடயமாகும்.  தோட்டங்களிலும், வியாபார மற்றும் தொழில்சாலைகளிலும், குறைந்த ஊதியத்திற்;காக வயிற்றைக் கழுவுகின்ற ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் இன்றைய அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவை சமாளிக்கவேண்டி தர்மயுத்தம் நடத்தவேண்டிய இக்கால கட்டத்தில் மேதினத்தின் ஊடாக சமூகத்தின் எஜமானர்களது படிமங்களை சற்று உயர்வுடன் பார்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்துகொள்வதும் கட்டாயமாகும். அதனை ஒருபுறம் வேறாக்கிவைத்துவிட்டு அரசியல் வாதிகள் தங்களுக்கிடையிலான பிரச்சினைகளையும், அரசியல் திருகுதாளங்களையும் அள்ளிவீசுகின்ற ஒரு மேதினமாக மாற்றுவதற்கு கங்கனம் கட்டி அலைவதை தொழிலாளர் வர்க்கம் உணர்ந்து கொள்ளவேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

உண்மையில் இன்றைய மேதினம் சுரண்டப்படும் வர்க்கத்தின் விடியலைநோக்கிய பயணத்தின் ஒருமுடிவுறாத கட்டம் ஏகிவிடப்பட்டுள்ளதை அரசுகளுக்கும், உழைப்பைச் சுரண்டி வயிறு வளர்க்கும் மேலிடத்திற்கும் எத்திவைக்கின்;ற செய்திகளைச் சொல்லுகின்ற ஒரு தினமாகவே பார்க்கப்பட வேண்டும். அதேவேளை, சமூக எழுச்சிக்கும், பொருளாதாரத்தின் முதுகொழும்புக்கும் தன்னை உருக்கொடுத்து வியர்வை சிந்து உழகை;கின்;ற தொழிலாளர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஆய்ந்தறிந்து அறிக்கை செய்வதும், தொழிற்சங்கள் தங்களது உரிமைப்போராட்டங்கள் பற்றிய பல்வேறுவிதமான நினைவாடல்களையும், மாபெரும் பேரணிகளையும் இறுதியில் அறிக்கைகளாகவும், மாபெரும் மேடைக்கூட்டங்களாகவும் நடாத்தப்படுவது வழமையான ஒருவிடயாமாகும். மறுபுறம். கட்சிகளும், நாடாளும் அரசுகளும் இப்போராட்டத்தில் தம்முடைய சார்பான தொழிலாளர் சங்கங்களின் ஊடாக கட்சிகளின் பிரச்சாரங்களையும், இன்னும் இன்னும் கவர்ச்சிகளையும் காட்டி தொழிலாளர்களின் பேரால் கொண்டாட்டத்துடன் முடிந்துவிடும் தொழிலாளர் தினமான மேதினம்.

சரி, இன்றைய மேதின நினைவு நாளில் தொழிலாளர்களின் சுயநலம் பாதுகாக்கப்படுதல் வேண்டும் என்பதனைத்தான் அனைவரும் வலியுறுத்துவர். எப்படிப்பட்ட தொழிலாளியாயினும் அவனது ஊதியம் சுரண்டப்படுவதை விரும்பமாட்டான். ஆனால் அன்று தொட்டு இன்றுவரை பல்வேறு பெயர்களில் ஏதோர் வடிவத்தில் சுரண்டப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. இதனைத்தான் அன்று அதாவது 1890ஆம் ஆண்டு மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடணப்படுத்தப்பட்ட அன்றைய நாள் தொடக்கம் இன்றுவரையிலும் சம்பள உயர்வுகளும், தொழிலாளர்களது உரிமைகள் மற்றும் சலுகைகளும் போராட்ட வடிவின் மூலமாகத்தான் வெற்றி பெற்றுள்ள வரலாறுகள் உலகில் எங்கும் காணப்படுவதானது ஒரு சம்பிரதாயமான சான்றிதழாகவே உருவெடுத்துள்ள நிலையினை நாம் காண்கின்றோம்.

மதம், நிறம், கலாசாரம், மொழி, போன்ற வர்க்கவேறுபாடின்றி தொழிலாளரது உரிமையினை பேராட்ட வடிவில் ஒருமித்த குரலில் தன்தொழில் தருநரிடம் கோரிக்கைகளை முன்வைத்து ஒப்புவிக்கும் ஓர் தினமாவே இத்தினம் பார்க்கப்படுகிறது. தன் எஜமானர்களினது தாங்கொண்ணா கஷ;டங்களை வேரோடு அறுத்தெரிந்து தொழிலாளர் சமூகத்தின் உரிமைகளை வெண்றெடுத்து அதன்மூலமாக அதிகார வர்க்கமும் தொழிலாளர் வர்க்கமும் சரிசமமாக ஒன்றிணைந்து சீர்மிகு பண்பாட்டினைக் கொண்டமைந்த மாணிடத்;துவத்தினை ஏற்படுத்துவதில் இன்றைய மேதினம் அன்று வழிசமைத்துக் கொடுத்துள்ளதை அறியவிளைகின்றபோது மிகப்பெரியதோர் எழுச்சிப்போராட்டம் அதனுள் வடிவமைக்கப் பட்டுள்ளதை அக்கால வரலாற்றுப் பின்னணியின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

ஏழைத் தொழிலாளர்கள் பட்ட பல்வேறு இன்னல்கள்ஃநோவினைகள் காரணமாக அன்று இங்கிலாந்தில் ஏற்பட்ட தொடரான தொழிலாளரது போராட்ட விளைவுகளினாலும், அந்நாட்டில் பல்வேறு தொழிற்சாலைச் சட்டங்கள் நிறைவேற்றக் காரணமாய் அமைந்திருந்தன. 1833ம்ஆண்டு, 1844ஆம் ஆண்டு, 1847ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இயற்றிய சட்டங்களினால் வேலை நேரங்கள் மீதான சில சலுகைகள் வழங்கப்பட்டன. ஆயினும் அமெரிக்காவின் பத்து மணித்தியாலய வேலை நேரமானது எட்டு மணித்தியாலய வேலைப் பேராட்டமாக உருவெடுத்து தொடர்கதையாகவே ஒட்டிக் கொண்டிருந்தது. இதன் விளைவாகப் பிறந்த இம்மேதினத்தை தொழிலாளர் ஒற்றுமை தினமாகவும் கொள்ளலாம். இருப்பினும்; பல ஆண்டுகளின் பின்னர் அமெரிக்காவின் சிக்காக்கே நகரின் மையத்தில் ஒன்றுசேர்ந்த தொழிலாளர் வர்க்கம் 1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பித்த போராட்ட வேக்காடானது அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளினது தொழிலாளர்களும் ஒன்றித்து எட்டு மணித்தியாலய வேலை நேரப்பேராட்டத்தை, போராடியதன் விளைவு 1890ஆம் ஆண்டு மேமாதம் முதலாம் திகதி சர்வதேச ரீதியாக அமுல்படுத்தும் ஒருதினமாக இத்திகதி காணப்பட்டது. அன்றுதான் தொழிலாளர்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் தினமாக கொண்டாடினர்.

இ;ப்பேராட்டத்திற்கு பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்களினது உயிர்கள் பறிக்கப்பட்டன. இரத்தம் சிந்திப் பெற்ற இப்போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களும் ஒற்றுமையாக இருந்து தமக்கான உரிமைகளை பெறவேண்டும். வேண்டுமென்று வலிதாக்கி போராட்டங்களை செய்வதில் எந்த விதமான பிரயோசனமும் இல்லை. நியாயமான போராட்டமாக அமைகின்றபோது அப்போராட்டங்கள் வெற்றிபெற்றுள்ளன. இதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். அண்ணல் மகாந்த காந்தியின் சாத்;;;;;;வீகப் போராட்டங்களும் ஒருவகையில் சுதந்திரத்தை பெறுவதற்காக போராடியவையே அதன் அர்த்தம் உண்மையாக இருந்தமையால் அந்தப் போராட்டமும் வெற்றிபெற்றது.

ஆசிரியரும் மேதினமும்.

உண்மையில் உழைக்கும் வர்க்கத்தினரின் பெருநாளாக, தம்முடைய உரிமைகளையும், ஏனைய சலுகைகளையும் தமது எஜமானர்களிடமும், அரசிடமும் வேண்டிக்கொள்ளும் ஒரு பரந்த நாளாகவே இவை பார்க்கப்படுகிறது. ஒவ்வொருவருடமும் மே தினம் வருகிறது இதுபோன்ற நடவடிக்கைகள் ஊர்வலங்கள் இறுதியில் மாபெரும் இசைநிகழ்ச்சி, கூட்டங்களுடன் முடிந்துவிடும். ஆனால் உழைக்கும் வர்க்கத்தினரின் இன்னொரு பிரிவினர் சமுதாயத்தின் அறிவுக்கண் திறக்க தன்னை முழுமையாக அர்ப்பனித்து தன்னை ஏணியாகவும், தோணியாகவும் தன்தோழ்மீது சுமந்து, எதிர்கால நற்பிரஜைகளை தோற்றுவிக்கின்றதும், உளரீதியானதும், வாண்மைத்துவம் நிறைந்ததுமான ஓர் தொழிலாளி வர்க்கம் எம்முள்ளே இருக்கின்றது. அவ்வர்க்கத்தை பெரிதாக யாரும் கண்டுகொண்டதாகவோ, அவர்களின் பக்கம் பார்த்ததாகவோ இல்லை. இருந்தாலும் அச்சமூகம் யாரையும் ஏறெடுத்துப்பார்க்காவிட்டாலும் தொழிலில் கண்ணியத்துடன், சாமர்த்தியமாக ஓட்டி சிறுபிராயமுதல் அன்பாக, ஆதரவுடன், இங்கிதமாய், ஈரெழுத்தை வழங்கி, உலகத்தினையே ஊடறுத்தும் செல்லும் தன்மையை வழங்கிக் கொண்டிருக்கும் ஒருவர்க்கமே ஆசிரியர் வர்க்கமாகும்.

உழைக்கும் வர்க்கத்தின் ஒருபிரிவினரான ஆசிரியர் பெருந்தகைளும் சமுதாய எழுச்சிக்கு அல்லும் பகலும் ஓயாது உழைக்கின்ற அரச சம்பளம் பெறும் மாபெரும் தொகையினரைக் கொண்டமைந்த ஓர் அமைப்பாகவே விளங்குகின்ற ஆசிரியர்களும் இத்தினத்தில் பயனள்ள விதமாக தம்மை இனங்காட்டி கொண்டாடவேண்டியது கட்டாயமாகும் என்றால் மிகையாகாது. ஏனெனில் சுமார் 2,25000க்கும் அண்மித்த தொகை கொண்ட மிகப்பெரியதோர் அமைப்பு இந்த ஆசிரியர்களாக காணப்படுகின்றனர். இருப்பினும் ஆசிரியர் சமுதாயத்தின் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து அறிக்கை செய்யவேண்டிய கடப்பாடு இச்சமுதாயத்தை பிரதிபலிக்கின்ற ஆசிரியர் தொழிற்சங்கங்களையே சாரும். ஆனால் நடைமுறை சாத்தியமுள்ள விடயங்களில் இச்சங்கங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளாது மாணவர்களின் பரீட்சை நேரங்களில் சில கோரிக்கைளை விடுவதும், சிலர் அதனை எள்ளிநகையாடுவதும், சிலர் பேசாது விடுவதுமாய் ஒரு ஒற்றுமை படாத உழைப்பாளர்களை கொண்டுள்ள அமைப்பாக இருக்கின்றார்களே என்கிற ஆதங்கங்களும் பல ஆசிரியர்களிடம் காணப்படுகிறது.

மேதினத்தில் தொழிலாளர்களது பல்வேறுபட்ட பிரச்சினைகளை முன்வைக்கின்றபோது சமுதாயத்தின் எதிர்கால இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்களாக பரிணமிக்கச் செய்து நாட்டின் நற்பிரஜைகளை தோற்றுவிக்கப் பாலமாய் அமைகின்ற ஆசிரியர்களது பலவிதமான பிரச்சினைகளும் அவர்களது சமுதாயப் பெறுமானங்களும் ஆராயப்பட்டு தீர்வுகாணுவதற்கான கட்டமாக இந்த மேதினத்தை சிறப்பானதாக வடிவமைப்பதில் ஆசிரியர் தொழில் சங்கங்கள் முன்னின்று உழைக்க வேண்டும். அப்போதுதான் தீர்வுகளும் கிட்டும். ஒற்றுமை மிகவும் பலமானது என்பதை உணர்ந்து கொண்டு எந்த ஒரு விடயத்திலும் ஒற்றுமை மிக்கவர்களாக ஆசிரியர் சமுதாயம் மிளிரவேண்டும்.

கடந்த காலங்களில் (இன்றைய) அரசு ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து தீர்வுகளையும் பெற்றுத்தந்துள்ளது. அந்தவகையில் பதவியுயர்வுகள், சம்பளநிலுவைகள் போன்ற பல்வேறு முரண்பாடுகளை களைந்து ஆசிரியர்களை கௌரவமிக்கதோர் இடத்தினையும் கொடுத்தே வந்துள்ளது. இருப்பினும் ஆசிரியர்களினது தொழில்சார்பான பட்டதாரிகளினதும், பயிற்றப்பட்டவர்களினதும் சம்பள ஏற்றத்தாழ்வுகள் இன்னும் மடுவுக்கும் மலைக்கும் உள்ளது போலவே காணப்படுகின்றது. இவற்றினை நிவர்த்தி செய்வதில் பல புள்ளித்திட்டங்களும், தடை தாண்டுவதிலும் கால தாமதங்களும் ஒரு தடையாகவே காணப்படுகிறது. தாமதங்கள் ஆசிரியரின்; மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றபோது அது மாணவர்களின் கற்றல் மேம்பாட்டினை பாதிக்கவும் செய்கிறது. மட்டுமன்றி சேவை மனப்பாண்மையுள்ள இத்தொழிலில் குறித்த சம்பளத்தையே நம்பி வாழ்கின்ற ஆசிரியர் சமூகத்தின் சம்பள உயர்வுகளையும், சம்பள மாற்றங்களையும் பொருளாதார உயர்வுக்கேற்றவாறு மாற்றியமைக்கின்ற ஒருநிலைமையை தொழில் சங்கங்கள் கோரிக்கை விடயத்துடன் நின்றுவிடாது அதனை அமுல்படுத்துகின்ற நடவடிக்கைகளிலும் தீவிரமாக உழைக்கவும் வேண்டும். பெயரளவில் சங்கங்கள் உருவாக்கப்பட்டு சம்பளத்துடன் லீவினைப் பெற்றுக் கொண்டு ஆசிரியர்களது வேலைகளைப் பார்க்காது வேறு வேலைகளைப் பார்க்கின்ற ஒரு அமைப்பாக சில ஆசிரியர் சங்கங்கள் காணப்படுவதாகவும் ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஆதலால் இன்றைய மேதினத்தை ஆசிரியர்களும் தங்களதுகோரிக்கைகளை முன்வைத்து உணர்த்துகின்ற ஒரு மேதினமாக ஆசிரியர் சமூகம் மாறவேண்டும்.

நாட்டின் புரையோடிப்போன பயங்கரவாதப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டு நாட்டின் அபிவிருத்தி மலைபோல் ஏறிக் கொண்டு கிராமங்கள் தோறும் நகரமயமாகிக் காட்சிதருகின்ற மகிந்த சிந்தனை வேலைத்திட்டங்கள்பல கணிவாகி வருகின்ற இக்காலகட்டங்களில் நாட்டின் அபிவிருத்தியை முன்னிறுத்தியதாகவே நமது போராட்டங்களும் அமைதல்வேண்டும். இருப்பினும் ஆசிரியர்கள் தங்களது வாண்மை விருத்தியில் மேம்பட்டு தமது கல்வித் தகைமைகளை, கற்றலுக்குத் துணைபுரிகின்றவாறு உயர்த்திக் கொள்கின்றபோது அதற்கேற்றவாறான சம்பள உயர்வினையும் பெறுவதில்தான் சிக்கல்களும், இழுபறிகளும் காணப்படுகின்றது. இதனை இல்லாமலாக்குகின்ற பணியினை உருவாக்க முயல்வதற்கும், பதவியுயர்வு, தாண்டுவதில் ஏற்படுகின்ற சில சிக்கல்கள் தோன்றாதிருக்க, உரிய காலத்தில், உரிய நேரத்தில் ஆசிரியர்களின் சம்பள உயர்வு, படிநிலை மாற்றங்கள் சிலவேளைகளில் இடர்பாட்டினை அடையாது பாதுகாக்கின்ற ஒரு முறையான திட்டங்களும் உருவாக்கப்படுதல் அவசியாமாகும்.

மேலும் ஆசிரியர்களை பட்டதாரிகளாக வழிசமைக்கின்ற ஒரு திட்டத்தை கல்வியமைச்சின் ஊடாக தேசிய கல்வி நிறுவகம் கைக்கொண்டு கடந்த பல ஆண்டுகளாக கல்விமாணிப் பட்டதாரிகளை உருவாக்கி வருகின்றன. கல்வியமைச்சுடன் இணைந்து இலங்கையின் தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கி அமுல்படுத்துகின்ற ஒரு தேசிய நிறுவனமாக காணப்படும் இலங்கையின் தேசிய கல்வி நிறுவக (Nஐநு - மகரகம)த்தில் பயிற்றப்பட்ட பட்டதாரிகளான கல்விமாணிகள் பலரை உருவாக்கி இன்று கல்விப்புலத்தில் மாணவர்களது உயர்வுக்காக சேவையாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கென்று ஒரு சம்பளத்திட்டமோ, பதவியுயர்வுகளோ இல்லாது பெயரளவில் பயிற்றப்பட்ட பட்டதாரிகளாக வலம் வருகின்ற ஒரு நிலைமைக்கும் மத்தியில் கணக்கெடுப்புக்காக வருகின்ற பத்திரங்களில் சிலவேளைகளில் இப்பட்டம் பெற்றவர்கள் புறக்கணிக்கப்படுகின்ற ஒரு நிலைமையும் காணப்படுகிறது. அத்துடன் இன்றுவரையிலும் வலயக்கல்வி அலுவலகங்களில் ஆசிரியரின் பணியினை மேம்படுத்தும்நோக்குடன் உதவியாக இருந்துவருகின்ற ஒரு சேவைத்திட்டமே ஆசிரிய ஆலோசகர் பதவியாகும். பல ஆண்டுகளாக இவர்களது பணிக்கென்று ஒரு நிரந்தரமான சேவைத்திட்டமோ, சம்பள உயர்வுகளோ இல்லாமை பெரும் குறைபாடகவே காணப்படுவதாக ஆசிரிய ஆலோசகர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கான நிரந்த சம்பளத்திட்டம், சேவைஉயர்வுகள்  போன்றவைகள் அரசினால் உருவாக்கப்படுவதற்கும் அரசு ஆவனசெய்யவேண்டும் எனகோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. எனவே இன்றைய மே தினத்தில் இப்பணியில் ஈடுபடுகின்ற ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இவர்களினது பிரச்சினைகளும், கோரிக்கைகளும் முன்வைக்கப்;பட்டு தீர்வு காணப்படுவதற்கு ஒத்துழைக்க வேண்டியதும் கட்டாயமானதாகும்.

எனவே, மாணவர்களின் கல்வியில் பாதிப்பினை ஏற்படுத்தாதவாறு தமது பிரச்சினைகளை முன்வைத்து தனிமனிதன், குடும்பம் மற்றும் தேசியத்தின் உயர்வுக்கு உறுதுணையாகவும், வலுவான கருவியாகவும் தொழிற்படுகின்ற ஆசிரியர் சமூகத்தின் தொழிற்பாட்டினை பிழையான வழியில் செல்வதிலிருந்து தவிர்ப்பதில் தொழிற்சங்கங்கள் உதவவேண்டும். அப்போதுதான் ஆசிரியர் பெறுமானமும் உயர்வானதாக காணப்படும்.
தத்துவஞானி அரிஸ்டோட்டில் 'சிறந்த முறையாக பிள்ளைகளுக்கு கற்பிப்பவர்; பெற்றோரைவிடவும் மிகவும் மரியாதைக்குரியவர்' எனக்கூறுவதிலிருந்து ஆசிரியர் மதிக்கப்பட வேண்டிய சமூகம். அவர்களினது உரிமைகள், சலுகைகள் மதிக்கப்பட்டு உதாசீனம் செய்யப்படாதவாறு கவனிக்கப்படுவதுடன், இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியாக ஆசிரியர்களுக்காக பேசுகின்ற அமைப்புக்களும் வலுப்பெற்று வருகின்ற ஒரு நிலைமையும் காணப்படுகின்றன. இருந்தாலும் ஆசிரியத்துவம் மனநிறைவோடு கருமமாற்றுகின்ற பணியாகும். வெறுமனே சம்பளத்தை மாத்திரம் பெறுகின்ற நிலை, கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் தான்தோன்றித் தனமாக இருப்பது, நீண்டகாலம் ஒரே பாடசாலையில், வீட்டுக்கு அண்மையில் பாடசாலை, அரசியல் பழிவாங்கள்கள் போன்ற செயற்பாடுகளும் ஆசிரியர்களது உத்வேகத்திற்குத் தடையாக அமைகின்றன.

அரசின் ஊழியனாக இருந்தால் இடமாற்றங்கள் ஒரு ஒழுங்குமுறையில் நடைபெறுகின்ற போது நாம் கட்டுப்பட்டு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து தொழிற்சங்கப் போராட்டம், பெற்றோர், மாணவர் போராட்டம் போன்றவைகளிலிருந்து தவிர்த்தல் வேண்டும். அத்துடன் ஏனைய அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போன்ற சில சலுககைகளையாவது ஆசிரியர் தொழிற்சங்கங்கள் பெற்றுத் தருவதில் கவனம் செலுத்துவதுடன் ஆசிரியர்களும் தமது கடமை தவறாத உத்தம சீலர்களாக பரிணமிக்க வேண்டிய கடப்பாடும் உள்ளவர்களாக சமுதாயத்தில் காணப்படுவதுடன், இன்றைய ஆசிரியர்களின் அந்தஸ்தினை உயர்வாக மதித்து மேதின நிகழ்வுகளை ஒழுங்கு செய்து ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தமது இலக்கினை அடைவதில் சரியான வியூகம் அமைத்து செயற்படல் வேண்டும் என்பதை இன்றைய மேதினத்தில் வலியுறுத்தி உரைக்கப்பட வேண்டும் என்பதே ஆசிரியர் சமூகத்தின் வேண்டுகோளாகும்.

No comments

Powered by Blogger.