இறையில்லம் மீது தாக்குதல் - மஹிந்த ராஜபக்ஸ மௌனம் கலைவாரா..?
தம்புள்ள பள்ளிவாசல் மீது சிங்கள இனவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் மேற்கொண்டு ஒரு வாரம் கடந்துவிட்டது.
இதுநேரவரைக்கும் பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.. எதிர்வரும் காலங்களிலும் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கான எத்தகைய அறிகுறிகளும் தென்படவில்லை.
பிரதமர் ஜயரட்ணா மீது முஸ்லிம் கட்சித் தலைமைகளுக்கு நம்பிக்கையில்லை. தம்புள்ள பள்ளிவாசல் அகற்றப்படுமென பிரதமர் தெரிவித்த நிலையில் அவரிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாதென்பது உண்மைதான். இதனால் பள்ளிவாசல் மீதான தாக்குதல் மற்றும் அதுகுறித்து ஆராய்வதற்காக பிரதமர் தலைமையில் கூட்டப்பட்ட கலந்துரையாடலிலும் நமது முஸ்லிம் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.
தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து நியாயம் கிட்டுமென முஸ்லிம் அரசியல் கட்சிகளும், முஸ்லிம் சமூகமும் காத்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, 27 ஆம் திகதி தென்கொரியாவிலிருந்து நாடு திரும்பியிருந்த ஜனாதிபதி, இற்றைவரைக்கும் பள்ளிவாசல் தொடர்பில் எத்தகைய பகிரங்க கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
பள்ளிவாசல் மீது சிங்கள இனவாதிகள் தாக்குதல் மேற்கொண்ட கடந்த 20 ஆம் திகதி அன்றுதான் ஜனாதிபதி இலங்கையிலிருந்து தென்கொரியா புறப்பட்டு சென்றார். அதற்கு முந்திய தினமான 19 ஆம் திகதி, ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு சில முஸ்லிம் பிரமுகர்கள் தம்புள்ள பள்ளிவாசலுக்கு ஆபத்து நேர்ந்துள்ளதாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இருந்தபோதும் தம்புள்ளயில் அமைந்துள்ள அல்லாஹ்வின் இல்லம் மீது சிங்கள இனவாதிகள் தாக்குதல் மேற்கொள்வதை எந்த அரசியல் சக்தியாலும் தடுத்துநிறுத்த முடியவில்லை.
பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ஒரு பக்கமிருக்க, தற்போது பள்ளிவாசலை அகற்ற காலக்கெடு விதித்திருப்பதுதான் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் வேதனைகொள்ளச் செய்துள்ளது.
எங்களுக்கு தங்கத்தினால் வேறிடத்தில் பள்ளிவாசல் அமைத்துத்தர வேண்டியதில்லை. பள்ளிவாசல் இருந்த இடத்திலேயே இருக்கட்டும். அங்கு தொடர்ந்தும் அல்லாஹ்வை சுஜுத்து செய்யவிடுங்கள் என்பதுதான் முஸ்லிம்களின் கோரிக்கை. இந்த கோரிக்கை தொடர்பில்தான் முஸ்லிம் சமூகம் ஜனாதிபதியிடமிருந்து சாதகமான நிலைப்பாட்டை எதிர்பார்க்கிறது. கடந்த சில நாட்களாக ஜனாதிபதி மஹிந்த பள்ளிவாசல் தொடர்பில் கடைபிடித்துவரும் தொடர் மௌனத்தை கலையவேண்டுமெனவும் முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கிறது.
ஆம், மஹிந்த ராஜபக்ஸ மௌனம் கலைவாரா..???
பள்ளிவாசல் தொடர்பில் அவர் கூறப்போகும் பதிலுக்காக முழு இலங்கை முஸ்லிம் சமூகமும் காத்திருக்கிறது என்பதை இங்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்..!!
Not only the Sri lankan Muslims
ReplyDeleteWhole world Muslims including Almighty Creator....
He Listening and Hearing everything...
Mr. Mahinda Raja P, This is a test for you from
Almighty Allah...
Find the truth, take the proper action according to the Roll.
He gave you life back by Muslims people but some you people couldn't realize... it and the value
This life is not permanent
Just a Test
The real permanent life is waiting here after....
ராஜா பக்ஸ குடும்பத்துக்கு தெரியாமல் நடந்து இருக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்களா ?ஜனாதிபதி நினைத்திருந்தால் கொரியா போக முன் தொலைபேசியில் அழைத்து ஒரு வார்த்தை உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ,என்று சொல்லியிருந்தாலே அன்றுடன் பிரச்சனை முடிந்து இருக்கும் .ஆனால் நாட்டில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தானே ஆட்சி செய்யலாம் .அத்துடன் முஸ்லிம்களாகிய நமக்கு இந்த உலகம் சோதனைக்குரியது தானே ,ஆகையால்
ReplyDeleteபொறுமையுடனும் ,தொழுகையுடனும் அல்லாஹ்விடம் உதவி தேடுவோம் .ஜசக்கல்லாஹ் .
Daoud Tharik
Ithaithaan "MAHINTHE SINTHANAI" yenraarhalo...
ReplyDeleteAppadiyenraal yeppadi mavunam kalaivathu...
Fahim Kandy
ReplyDeleteAthu Allahwin Maligai. Allahwin Maligaiyai wimarsippathatkku Entha Arasanalum, Arasiyalwadiyalum Mudiyathu. Thayawu seithu Musleemgal Ontrupatungal. Arasiyalwadi, Ulama sabai, Jamiyathul ulama entruellam peyarwaithukkondtru piriwaka iruppathai nirithtikollungal. Allah adai werukkuran. Allahwitam Dua kelungal. Nichchiyam Allah Uthwi seiwaan. Ungal Anaiwarukkum NERWALI KATTUWAN. Alhamdulillah.