யாழ்ப்பாண பொது நூலகம் பற்றிய கலந்துரையாடல் - (படங்கள் இணைப்பு)
யாழ்ப்பாண பொது நூலகத்தின் மாநாட்டு மண்டபம் மற்றும் கணனிக் கூடங்களை நவீனமயப்படுத்துவது தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்ந்தார்.
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர், அங்குள்ள மாநாட்டு மண்டபத்தை நவீனமயப்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தியதுடன் அங்கு வரும் அதி முக்கிய பிரதிநிதிகளுக்கான பிரத்தியேக மலசல கூடங்களை அமைப்பது மற்றும் கணனிக் கூடங்களை நவீனமயப் படுத்துவது தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதனிடையே அங்குள்ள மொட்டை மாடிக் கட்டிடத்தை நூலகத்தின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவது மற்றும் லிப்ற் வசதிகளை மேம்படுத்துவது தொடர்பிலும் துறைசார்ந்தோரிடம் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் அவர்கள் நூலகத்தின் சுத்தம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் பணிப்புரை விடுத்தார்.
இதன்போது யாழ் மாநகர முதல்வர் வடமாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
1990 இலிருந்தே யாழ் முஸ்லீம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் மவ்லவி சுபியான் அவர்களும் படத்தில் கானப்படுகின்றாரே.
ReplyDeleteஅவரது பெயரை செய்தியில் குறிப்பிடாமல் தவற விட்டது கண்டனத்துக்குரியது.