Header Ads



ஹாபீஸ் நசீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தார் - உடனடியாக பதவியும் கிடைத்தது

தினகரன்

ஜனநாயக ஐக்கிய முன்னணி (துவா), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤டன் இணைந்து எதிர்காலத்தில் செயற்பட முன்வந்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனநாயக ஐக்கிய முன்ன ணியின் தலைவர் ஹாபீஸ் நசீர் அஹமட் மற்றும் அக்கட்சியின் மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் உட்பட கட்சியின் உறுப்பி னர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டிருப்பதாக நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.

ஆளும் கூட்டணி அரசாங்க த்தின் பங்காளிகள் என்ற ரீதியில் முஸ்லிம் காங்கிரஸ¤டன், துவா கட்சியினர் இணைந்து செயற்படுவார்கள் என்றும், துவா கட்சியின் தலைவர் நசீருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

அதேநேரம், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஒரே குடையின் கீழ் ஐக்கியப்பட வேண்டியதற்கான சூழ்நிலை தோன்றி யிருப்பதாக இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த துவா கட்சியின் தலைவர் ஹபீஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

றுபான்மையினரின் விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய பங்காற்ற வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அனைத்து முஸ்லிம் தலைவர்களும் தமது தனிப்பட்ட வேறுப ¡டுகளை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் தோன்றியிருப்பதாகவும் கூறினார்.
இலங்கை அரசியலமைப்புக்கு அமைய எந்தவொரு கட்சியையும் கலைக்க முடியாது.

இந்த நிலையில் நாம் ஸ்ரீல ங்கா முஸ்லிம் காங்கிரஸ¤டன் இணைந் துள்ளபோது எமது கட்சி கலைக்கப்படாது. எமது உறுப்பினர்கள் முஸ்லிம் காங் கிரஸ¤டன் இணைந்து செயற்படுவார்கள். எதிர்காலத் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்தே போட்டியிட விருப்பதாகவும் நசீர் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் மஜீட், துவா கட்சியின் மேல்மாகாணசபை மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments

Powered by Blogger.