இந்தியாவின அணு உலைகள் - வடமாகாணத்திற்கு அச்சுறுத்தல் - எச்சரிக்கிறார் அமைச்சர்
அணுசக்தி பயன்பாடு தொடர்பில் இந்தியாவுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒனப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடத் திட்டமிட்டுள்ளது. அணுசக்தி அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இந்த யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்திய அணு உலைகளினால் இலங்கையின் மன்னார் மற்றும் வட பகுதிகளுக்கு ஏற்படக் கூடிய அபாயங்களை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கூடங்குலம் அல்லது வேறும் ஓர் அணு உலையில் ஏற்படக் கூடிய விபத்துக்களினால் மன்னார் மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார். கூடங்குலம் அணு உலை மன்னாருக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இந்தியாவிற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், அணுக் கதிர்வீச்சு தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அணு உலையின் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னதாக அண்டை நாடான இலங்கையுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, அணு உலைகள் அரசியல்வாதிகள் சித்தரிப்பதனை போன்று மிகவும் ரம்மியான ஒர் சக்தி வளம் கிடையாது என பிரபல சுற்றாடலியலார் ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.
அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய சக்திகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அணு சக்தி வளப்பயன்பாடு தொடர்பில் போதியளவு மக்கள் மத்தியில் தெளிவின்மையே, அணு உலைகள் தொடர்பான பீதிக்கான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அணு விஞ்ஞான பீட பேராசிரியர் ரோஹினி ஹேமவன்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, எந்தவொரு சக்தி உற்பத்தி செயன்முறையிலும் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டொக்டர் பிரினாத் டயஸ் தெரிவித்துள்ளார்.
Post a Comment