ஆயுதம் ஏந்தாத முஸ்லிம்களை சிங்கள சமூகம் சரியாக புரிந்துகொள்ளவில்லை - ரவூப் ஹக்கீம்
எம்.எம்.எம்.ரம்ஸீன்
முஸ்லிம் சமூகம் அரசியல் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தாத சமூகமாக இருப்பினும் பெரும்பான்மை சமூகம் முஸ்லிம் சமூகத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
முஸ்லிம் சமூகம் அரசியல் போராட்டத்தில் ஆயுதம் ஏந்தாத சமூகமாக இருப்பினும் பெரும்பான்மை சமூகம் முஸ்லிம் சமூகத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கெலிஓயா கலுகமுவ தரீக்காக்கள் சம்மேளனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடத்திய 'வாழ்வோரை வாழ்த்துவோம்' பெருவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
'இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகம் தனது வரலாற்றில் ஆயுதம் ஏந்தாத அரசியல் போராட்டத்தையே புரிந்து வருகின்றது. ஆனால், பெரும்பான்மை சமூகம் இதுவரை முஸ்லிம் சமூகத்தை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இப்புரிந்துணர்வு இன்மையால் தப்பான அபிப்பிராயங்களும் தேவையற்ற சந்தேகங்களும் தொடர்கின்றன' எனவும் அவர் கூறினார்.
இதன்போது பல்வேறு துறைகளில்; சாதனை படைத்தவர்கள் கௌரவ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் அஸ்ஸெய்யது அஸசெய்ஹ் பசீர் கோயாத் மற்றும் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்களே!,
ReplyDeleteநீதியமைச்சர்களுக்கெல்லாம் நீதிபதியாகியவனின் முன்னிலையில் ஷிர்க் கூட்டத்துடன் கூடியமைக்காக, பாவமன்னிப்பை கோராத வரையில், தண்டனையை எதிர்பார்த்திருப்பீராக !