யாழ்/கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன தலைவராக எம்.நிலாம் தெரிவு - குழப்பமும் முறியடிப்பு
யாழ் முஸ்லிம் இணைய விஷேட நிருபர்
யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதிநிதிகள் சபைக்கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் யாழ் ஒஸ்மானியா வளாகத்தில் அதன் உப தலைவர் அல்ஹாஜ் அமீன் அவர்களின் தலைமையில் தொடக்கப்பட்டது. சுமார் 35 அங்கத்தவர்கள் கலந்துகொண்ட இந்த பிரதிநிதிகள் சபைக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விடயங்கள் எடுத்தாளப்பட்டன.
இன்றைய கூட்டத்தில் மிகவும் முக்கியமான விடயமாக தலைவர் தெரிவு விடயம் காணப்பட்டது, சட்டத்தரணி றமீஸ் அவர்கள் சம்மேளனத்தின் யாப்பின் அடிப்படையில் தலைவர் தெரிவு விடயத்தை அறிமுகம் செய்து சபைக்கு விளக்கமளித்தார், அதனைத்தொடர்ந்து ஒரு சிலர் முபீன் இல்லாத நிலையில் புதிய தலைவர் தெரிவு எவ்வாறு இடம்பெறும் என்று கேள்வி எழுப்பவே, முபீன் அவர்கள் எழுத்துமூலம் அனுப்பிய செய்தி சபையில் படிக்கப்பட்டது. சபையைக் குழப்ப ஒரு சிலர் முயன்றபோதும் சபையில் இருந்த பெரும்பான்மையான அங்கத்தவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து தலைவர் தெரிவு இடம்பெற்றது. சம்மேளனத்தின் புதிய தலைவராக சகோதரர் எம்.நிலாம் அவர்களும் பிரதி தலைவராக சகோதரர் மீரான் லாபிர் (பிளவ்ஸ்) அவர்களும் தெரிவு செய்யப்பட்டார். அடுத்துவரும் 4 மாதங்களுக்கு குறித்த இருவரும் பதவியில் தங்கியிருப்பார்கள் என சம்மேளனத்தின் செயலாளர் அவர்கள் எமக்குத் தெரிவித்தார்கள்.
தப்புக் கணக்குப் போட்டவர்களுக்கு நல்ல பதில்.
ReplyDeleteசம்மேளனம் செயலாற்றுப் போகாமல் பாதுகாத்த
அனைவருக்கும் பாராட்டுக்கள்.
சட்டத்தரணி ரமீஸ் மற்றும் சகோதரர் முபீனுக்கு நன்றி.
புதிய தலைமுறை, இளைய தலைமுறை என்று போலிக் கோஷம்
போட்டுக்கொண்டு தலைமையைக் குறி வைத்தவர்களுக்கு
ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.
சகோதரர் மீரான் லாபிர் ஊடகத்துறையுடன் தொடர்பு உள்ளவர்.
யாழ் முஸ்லிம் இணையத்தளம் இவரின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
யாழ்ப்பான முஸ்லிம்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு காளான்கள் போல
பல ஊடகங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, முந்திக்கொண்டு
செய்தியைத் தந்த யாழ் முஸ்லிம் இணையத் தளத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
சும்மா துள்ளியவர்கள் இப்பொழுது பதிலைப் பெற்றிருப்பார்கள்.
1997 முதல் யாழ்ப்பாணத்தைக் கட்டியாண்டவர்களுக்கு இது ஒரு இடியாகவே இருந்திருக்கும், இதுவரை சம்மேளனத்தில் அவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள், இப்போது அது ஒரு நடுநிலையானவர்களின் கைகளுக்கு வந்திருக்கின்றது, சிறப்பாக கடமையாற்றி எமது சமூகத்தின் விடிவுக்கு சம்மேளனம் வழி செய்யும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்
ReplyDeleteNeed more update about the meeting, please!
ReplyDelete