நோர்வேயில் 77 பேரை சுட்டுக்கொன்றவன் ஒபாமாவையும் படுகொலை செய்ய சதி செய்தானாம்
நார்வே தலைநகர் ஆஸ்லோவில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்றார். அந்நிகழ்ச்சியின்போதே, அவரை கார்வெடிகுண்டு வைத்து கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டது தற்போது வெளியாகியுள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 77 பேர் பலியாயினர். இதுதொடர்பாக பயங்கரவாதி ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரெய்விக் கைது செய்யப்பட்டுள்ளான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2009ல் நோபல் பரிசு பெற வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. உடோயா தீவு பகுதியில் துப்பாக்கிச்சூட்டுடன் துவங்கும் சதித்திட்டம், ஒபாமா இருக்கும் இடத்தில் கார் குண்டு வெடிப்புடன் முடிவடைவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. ஆனால் ஆஸ்லோ பகுதியில் வரலாறு காணாத பாதுகாப்பு செய்யப்பட்டிருந்ததால், கடைசி நேரத்தில் இந்த சதித்திட்டம் கைவிடப்பட்டதாக அவன் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
Post a Comment