Header Ads



ஹபீஷ் சயீத் தலையை கொண்டுவாருங்கள் - 50 கோடி தருகிறோமென்கிறது அமெரிக்கா

பாகிஸ்தான் லஸ்கர் -இ-தொய்பா இயக்கத்தின் நிறுவனர் ஹபீஷ் சயீத். இவரது தலைக்கு ரூ.50 கோடி பரிசு தொகையை அமெரிக்கா அறிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தானில் இயங்கும் ஜமாத்-ஹத்-தவா என்ற மற்றொரு அமைப்பின் தலைவராகவும் உள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் நடத்திய தாக்குதலில் மூளையாக செயல்பட்டார். இந்த தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். இதற்கு பாகிஸ்தானின் உளவு துறையான ஐ.எஸ்.ஐ. உதவி செய்தது.

மும்பை தாக்குதல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக ஹபீஷ் சயீத் அறிவிக்கப்பட்டார். அவரை விசாரணைக்காக ஒப்படைக்கும்படி பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தியது. இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

இந்த நிலையில், அவரது தலைக்கு அமெரிக்கா ரூ.50 கோடி பரிசு அறிவித்துள்ளது. அவரை உயிருடனோ அல்ல பிணமாகவோ பிடித்து கொடுக்கலாம் என அறிவித்துள்ளது. அமெரிக்காவின் செயலாளர் வென்டி ஷெர்மான் 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் ரஞ்சன் மத்தாய் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

சயீத் தவிர அவரது மைத்துனர் மற்றும் லஸ்கர்- இ-தொய்பா இணை நிறுவனர் அப்துல் ரஹ்மான் மாக்கி ஆகியோரின் தலைக்கு தலா ரூ.15 கோடி பரிசு தொகையும் அறிவிக்கப்பட்டது. பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு அல்கொய்தாகளின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்மான் அல் ஷவாகிதியின் தலைக்கு அமெரிக்கா ரூ.125 கோடி பரிசு தொகையை அறிவித்தது.

அவரை தொடர்ந்து தற்போது ஹபீஸ் சயீத் தலைக்கு ரூ.50 கோடி பரிசு தொகையை அறிவித்துள்ளது. இதே போன்று ஏற்கனவே தலிபான் தலைவர் முல்லா ஒமர் தலைக்கும் ரூ.50 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.