சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 426.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குகிறது
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 7ம் தொகுதியாக கடன் அடிப்படையில் நிதியுதவி வழங்க தீர்மானித்துள்ளது. அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 426.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் அடிப்படையில் வழங்கவுள்ளது. மேலும் 8வதும் இறுதித் தொகுதியுமாக கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஜூலை 23ம் திகதிவரை கால எல்லை பெற்றுள்ளது.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் கடன் தொகையை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment