Header Ads



URGENT: FREEBOX-ல் ஒளிபரப்பபடும் NEW KANCHI FILMS சம்பந்தமாக...!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பிற்கினிய சகோதரர்களே !

நாம் வாழும் இந்த பிரான்ஸ் நாட்டில் இரண்டாவது பெரிய வாழ்க்கை நெறியாக இஸ்லாம் இருந்து கொண்டிருகிறது. அது கூடிய விரைவில் முதலிடத்தில் வர எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்பதோடு நம் பிரச்சார வழிமுறைகளும் அமைத்து கொள்ளவேண்டும் இன்ஷா அல்லாஹ்.

மிக முக்கியமான விஷயம் சம்பந்தமாக உங்களுக்கு தெரியபடுத்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவே இந்த e-மெயில் மூலம் உங்களை சந்திக்கிறோம் .

பிரான்ஸ் தகவல் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பில் முக்கிய இடத்தில் இருக்கும் நிறுவனம் FREEEBOX NETWORK என்பது தாங்கள் அறிந்ததே. ஆனால் அந்த FREEBOX ஒளிபரப்பில் தங்கள் சொந்த வீடியோக்களை ஒளிபரப்புகிறோம் என்கின்ற பெயரில் சில வீடியோக்கள் இஸ்லாத்திற்கு எதிராகவும் நம் முகமது நபி (ஸல்) அவர்களை கேவலபடுத்தியும் NEW KANCHI FILMS என்கின்ற பெயரில் ஒரு மனித சைத்தான் தன் கைவரிசையை காட்டிகொண்டிருகிறான். அவன் தன் பெயர் மற்றும் விலாசம் எதையும் வெளியிடாமல் குர் ஆன் மற்றும் ஹதிஸ் பற்றி கொஞ்சமும் அறிவில்லாமலும் அதை சம்பந்தப்பட்டவர்களிடம் தெளிவுபடுத்திகொள்ளாமலும் காழ்புணர்ச்சி ஒன்றையே கருத்தில் கொண்டு இட்டுகட்டப்பட்ட வரலாற்றுக்கு முற்றிலும் எதிரான வரலாற்று செய்திகளை திரித்து வேண்டும் என்றே செய்து கொண்டிருக்கிறான்.

மேலும் அவன் தனி ஆளாக இல்லாமல் இப்போது மேலும் ஒரு சில இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கருத்து கொண்டவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாச வேலையை செய்ய ஆரம்பதிருகிறான். ஆனாலும் நம் மார்கத்தை அந்த நயவஞ்சகர்களால் ஒன்றும் செய்து விட முடியாது. ஆனாலும் நம் எதிர்ப்பை அவனுக்கு காட்டுவதோடு நம் அனைவரின் ஒற்றுமையையும் இதில் நிலைநாட்டவேண்டும். ஆகையால் FREEBOX வைத்திருக்கும் ஒவ்வொருவரும் NEW KANCHI FILMS என்கின்ற பெயரில் வருகின்ற ஒவ்வொரு video வையும் ALERTE செய்யவேண்டும். இதனால் தங்களுக்கு எந்த வித பிரச்சனையும் வரபோவதில்லை. அவன் VIDEO -வை பார்த்து அதை பார்த்தவர்களின் எண்ணிகையை அதிகபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுகொள்கிறோம். இது சிறிதளவு ஈமான் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.

நீங்கள் மனித குலத்துக்காக தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருகிறிர்கள். நன்மையை ஏவுகிறிர்கள். தீமையை தடுகிரிற்கள். அல்லாஹ்வை நம்புகிறிர்கள். குர் ஆன் 3:110

மேலும் அவனையும் அவன் கூட்டத்தாரையும் நேருக்கு நேர் சந்திக்கவும் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக மேலும் செய்திகள் உங்களுக்கு தெரியபடுத்தி விழிபுணர்ச்சி ஏற்படுத்த உங்களை பிறகு e-mail முலம் சந்திக்கிறோம்.வஸ்ஸலாம்.

குறிப்பு: இந்த e-mail செய்தியை இங்கு வாழும் FREEBOX வைத்திருக்கும் உங்கள் CONTACT-ல் உள்ள ஒவ்வொருவருக்கும் அனுப்பி நன்மையை அதிகபடுதிகொள்ளவும்.பிறகு சிந்திப்போம் இன்ஷா அல்லாஹ்.

1 comment:

  1. How can Sri Lnkan muslims help in this?

    ReplyDelete

Powered by Blogger.