புத்தளம் முஸ்லிம் மாணவிகளும் O/L பரீட்சையில் சாதனை
புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரப்) பரீட்சை 2011 க்கு தோற்றிய மாணவிகளில் 75 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் சித்தியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்களில் நான்கு மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் திறமை சித்தியடைந்துள்ளனர். மாணவிகளான பாத்திமா நப்லா, பாத்திமா ரக் ஷானா மற்றும் தில்ஷாத் பானு ஆகிய மூவரும் தமிழ் மொழி மூலம் தோற்றியவர்களாவர்.
மேலும், இப்பரீட்சைக்கு ஆங்கில மொழிமூலம் தோற்றிய மாணவி பாத்திமா சித்தீக்கா, ஆங்கில மொழிப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதற் தடவையாக அனைத்து பாடங்களிலும் திறமைச் சித்தியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
ஆங்கில மொழியில் சிறந்த ஆற்றல் பெற்ற சித்தீக்கா அவர்கள் 2010 ஆண்டில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட ஆங்கில பேச்சுப் போட்டியில் Divisional மட்டத்திற்கு தெரிவானதுடன் பாடசாலைகளுக்கான இஸ்லாமிய தினப் போட்டிகளில் ஆங்கில மொழிமூலம் பங்குபற்றி பரிசில்களைப் பெற்றுள்ளதுடன் CIMA நிறுவனமும் சிரச தொலைக்காட்சியும் இணைந்து நடத்திய Spell Master Competition இல் கலந்து கொண்டு இரண்டாவது மட்டத்திற்கும் தெரிவானார் என்பதுடன் இவர் ஐந்தாம் வகுப்பு புலமைப் பரிசில் பரீட்சையிலும் சித்தியடந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் முன்னாள் நகர சபை உறுப்பினரும் சாஹிரா தேசிய பாடசாலை ஆசிரியரும் சமூக ஆர்வளருமான எஸ்.ஆர்.எம். முஹ்சி அவர்களினதும் புத்தளம் சைனப் பெண்கள் ஆரம்பப் பாடசாலை ஆசிரியை ஆயிஷா அபூபக்கர் ஆகியோரின் மூத்த புதல்வியுமாவார்.(புத்தளம்இணையம்)

Post a Comment