O/L பரீட்சை மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் - ஆணையாளர் தெரிவிப்பு
க.பொ.த சாதாரணதர விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.
இவ்விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 21ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களின் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்திற்குச் சென்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
அதற்கான மாதிரி விண்ணப்பங்களை தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஒரு பாடத்திற்கு மீள் திருத்தக் கட்டணமாக 150 ரூபா அறவிடப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே,புஷ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment