யாழ்/கிளிநொச்சி சம்மேளன கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் - தலைவர் தெரிவும் நடைபெறும்
யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனம் செயற்குழு கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெறுமென சம்மேளன செயலாளர் சட்டத்தரணி ரமீஸ் தெரிவித்தார்.
யாழ் முஸ்லிம் இணையம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்தபோதே ரமீஸ் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த கூட்டத்தின்போது யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் அடுத்த (புதிய) தலைவர் தெரிவு செய்யப்படுவாரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பிற்குறிப்பு - யாழ் முஸ்லிம் இணையத்தில் நேற்று வியாழக்கிழமை, 29 ஆம் திகதி சம்மேளன கூட்டம் பற்றிய ஒரு செய்தி வெளியாகியிருந்தது. சகோதரர் முபீன் சார்பில் அந்த அறிவித்தல் யாழ் முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்த செய்தியை உறுதிப்படுத்தும் நோக்குடன் சம்மேளன செயலாளர் என்றவகையில் சட்டத்தரணி ரமீஸுடைய கையடக்க தொலைபேசி இலக்கத்திற்கு யாழ் முஸ்லிம் இணையம் (இலங்கை நேரம் பிந்நேரம் 4.20 மணிக்கு) தொடர்புகொண்டது. இருந்தபோதும் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அவரிடமிருந்து எமது தொலைபேசி அழைப்பு தொடர்பில் ஏதேனும் பதில் வருமென காத்திருந்தோம். எனினும் பதில் வரவில்லை. இதனையடுத்தே முபீன் அனுப்பியிருந்த செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
வேலையில்லாமல் வெறுமனே பூச்சாண்டி
ReplyDeleteகாட்டி,வீண் பிரச்சினையை வளர்த்து அதில்
குளிர் காய முயன்றவர்களுக்கு சிறந்த நெத்தியடியான பதில்.
சகோதரர் சட்டத்தரணி ரமீஸ் அவர்களிடம் சமூகம் நிறையவே எதிர்பார்க்கின்றது.
அவரது சமூகம் தொடர்பான பார்வையில் இன்னும் சற்று மாற்றம் தேவை.
தூய இஸ்லாத்தை அவர் இன்னும் சிறிது கற்றுக் கொள்ள வேண்டும்
என எதிர்பார்க்கின்றோம்.
இதுவரையான அவரது ஆக்கபூர்வமான அர்ப்பணிப்புகளுக்கும், ஆராக்கியமாக அவரால் செய்யப்பட
சேவைகளுக்கும் எமது நன்றிகள், பாராட்டுக்கள்.
உள்நோக்கம் இல்லாத,
யாருக்கும் குடை பிடிக்காத, பதவி ஆசை கொண்டு அலைகின்றவர்களுக்கு
தேவையில்லாத விளம்பரம் கொடுக்காத யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின்
சேவைகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
தொடர்க உங்கள் சேவை.
Abo Azzam
தலைவர் அழைப்பு விடுக்க முடியாது என்று சொன்னவர்கள் இதனை வாசித்தால்
ReplyDeleteநல்லது.
குறிப்பு : தலைவர் எங்கே கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்?
தமிழ் தெரியாதா?
யாழ்ப்பாண சொனகரா அப்படி எழுதியது?
மீண்டும் ஒழுங்காக சம்மேளனத் தலைவர் முபீனின் கடிதத்தை வாசிக்கவும்.
தமிழ் தெரியாவிட்டால் தெரிந்தவரிடம் கேட்கவும்.
மொட்டைத்தனமாக கருத்து பதிய வேண்டாம்.
கடந்த செயற்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப் பட்ட தீர்மானத்தை
தலைவர் உறுதிப் படுத்தினாரே தவிர, அவர் ஒன்றும் புதிதாக
கூட்டத்துக்கு அழைப்பு விடவில்லை. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த படி கூட்டம்
நடைபெறாது என தலைவரை காரணமாக கூறி செய்யப்பட பொய்ப் பிரச்சாரத்துக்கான மறுப்பே
அக்கடிதம், கூட்டத்துக்கான பிரகடனம் அல்ல.
ஒழுங்காக படிக்காமல், துரோகிகளின் இணையம் என்றெல்லாம்
சொல்லுவது, சொல்பவர்கள் சமூகத்துக்கு செய்யும் துரோகமே தவிர வேறில்லை.
நமோ நமோ மாதா மிகவும் சரியாக குறிப்பிட்டுள்ளார் அதாவது தலைவர் கூட்டம் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார், ஆனால் எதற்காக குழந்தை நஸீர் மற்றும் புதுப்பள்ளியில் வேலை செய்யும் ஜஹ்பர் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் இருக்கும் சம்மேளன அங்கத்தவர்களை தனித்தனியாக சந்தித்து முபீன் காக்கா யாழ்ப்பாணத்தில் இல்லை அவர் இந்தியாவில் இருக்கின்றார் றமீஸ் கூட்டத்தைக்கூட்டி தலைவரை மாற்றப்பார்க்கின்றார் எனவே நாம் அந்தக்கூட்டத்தை ஒத்திவைக்கும்படி கடிதம் கொடுப்போம் முபீன் காக்கா யாழ்ப்பாணத்துக்கு வந்தபின்னர் கூட்டத்தை நடாத்துவோம் என்று கூறவேண்டும்???? இதுவரை அந்தக்கடிதத்தில் 6 சம்மேளன உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர், இது முபீன் காக்காவின் பெயருக்கு இழுக்கை ஏற்படுத்தும் நடவடிக்கை அல்லவா இதை ஏன் முபீன் காக்க உடனடியாக தடுக்க முடியாது அல்லது குறித்த நபர்கள் இருவரும் முபீன் காக்காவுக்கு மிகவும் விசுவாசமானவர்கள் அவர்கள் முபீன் காக்கா இதனைக்கூறாமல் செய்திருப்பார்களா? இந்தக்கேள்விகளுக்கும் நமோ நமோ மாதா பதில் தந்தால் சிறப்பாக இருக்கும்
ReplyDeleteஉங்கள் கேள்வி சிறப்பாக இருக்கின்றது என்று
ReplyDeleteசொன்னால் மிகவும் சந்தோசப் படுவீர்களோ?
(ஒரு பெயரைப் போட்டு கருத்து பதியுங்கள்,
பாராட்டவும், வாழ்த்தவும் வசதியாக இருக்கும்.)
மிக்க சந்தோசம், உங்கள் கேள்விகளில் பின்வருவன
இல்லாமல் இருந்ததுக்கு.
////ஐதுரூஸ் மகாம் சந்தியில் முன்னர் ஹோட்டல் வைத்திருந்த
*********** ட மகனுடைய
ஹோட்டலில் ப்ளேன் டீக்கு சீனி போதவில்லையே ஏன்? கே கே எஸ் ரோட்டில்
காத்தான்குடி *********** ஹோட்டலில் வெள்ளிக்கிழமை விற்கப்பட்ட 3
சிக்கன் புரியாணி பார்சல்களில் அவித்து பொரித்த முட்டை இருக்கவில்லை,
இந்தக் கேள்விகளுக்கும் நமோ நமோ மாதா பதில் தந்தால் சிறப்பாக
இருக்கும்////
இவற்றையும் சேர்க்காமல் விட்டதற்கு நன்றி.