Header Ads



குறிக்கோளுடன் வாழ்பவர்களுக்கு ஆயுள் குறைவு - லண்டன் ஆய்வில் தகவல்

குறிக்கோளுடன் வாழ்பவர்கள் அதிகம் சம்பாதித்தாலும் நிம்மதியில்லாமல், இளம் வயதில் மரணமடைய கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லண்டனை சேர்ந்த நோட்ரி டேம்ஸ் பல்கலைக் வல்லுனர்கள், திமோதி ஜட்ஜ் என்பவர் தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். ஆக்ஸ்போர்ட், ஹார்வர்டு, யேல் போன்ற பல்கலைக் கழகங்களில் படித்த அதி மேதாவிகள், 717 பேரை, இவர்கள் தங்கள் ஆய்வுக்கு எடுத்து கொண்டனர்.

சிறு வயது முதலே அதிக குறிக்கோளுடன் படித்து, உயர் பதவிகளை வகித்த பலர் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தால், உறவுகளை அதிகம் வளர்ப்பதில்லை. இன்னும் சிலர் முன்னேற வேண்டும் என்ற வெறியில், உடல் நலத்தை கூட கவனிப்பதில்லை.

வாழ்வில் உயர வேண்டும் என்ற ஆர்வத்தை, இவர்கள் தங்கள் உடல் நலத்திலும், சமூக உறவிலும் காண்பிக்காததால், அதிக குறிக்கோள் இல்லாமல் வாழ்பவர்களை விட, இவர்கள் குறைந்த சந்தோஷத்தையே அனுபவிக்கின்றனர். ஓரளவு சந்தோஷத்தை அனுபவிப்பவர்களும், அல்ப ஆயுசில் போய் சேர்ந்து விடுகின்றனர் என, இந்த ஆய்வை மேற்கொண்ட திமோதி ஜட்ஜ் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.