வடமாகாணத்தில் முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் மாத்திரமே பிரச்சினைகள் உண்டு
வடமாகாணத்தில் சிங்களவர்களுக்கும், முஸ்லீம்களுமே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் வட மாகாணத்தில் மேற்கொண்ட புதிய கணகெடுப்பு அறிக்கை மூலம் இது உறுதியாகியுள்ளது. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறி, புலிகளுக்கு உந்து சக்தியை கொடுக்கும் மேற்குலக நாடுகளுக்கு இந்த அறிக்கை சிறந்த பதிலை வழங்கியுள்ளது எனவும் ரணவக்க கூறியுள்ளார்.
1971 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் 20 ஆயிரத்து 402 சிங்கள மக்கள் வாழ்ந்தனர். அந்த பிரதேசத்தில் தற்போது, 884 சிங்களவர்கள் மாத்திரமே தற்போது வசித்து வருகின்றனர். 1971 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 10 ஆயிரத்து 312 முஸ்லீம் மக்கள் வசித்து வந்தனர். தற்போது, அங்கு 2 ஆயிரத்து 648 முஸ்லீம் மக்களே வாழ்கின்றனர்.
1971 ஆம் ஆண்டு வடக்கில், 95 வீதமாக இருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டில் 98 வீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வடக்கில் இனப்பிரச்சினை யாருக்கு இருக்கிறது, யாருக்கு அநீதி ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது. புள்ளிவிபர திணைக்களத்தின் இந்த அறிக்கை, புலிகளுக்கு உந்து சக்தியை கொடுக்கும் மேற்குலக நாடுகளுக்கு சிறந்த பதிலை வழங்கியுள்ளது. தருஸ்மன் அறிக்கையில் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை, ரொபர்ட் ஓ பிளேக் ஆகியோர் இந்த சிங்கள, முஸ்லீம் மக்களுக்காக குரல் கொடுக்காதது மிகவும் கவலைக்குரியது எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment