Header Ads



சமூகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் நாடுகள் - ஆசியாவில் இலங்கைக்கு முதலிடம்

சமூகத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்திற்கு அமைய ஆசியாவில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. உலகப் பொருளாதார அமைப்பினால் வெளியிடப்பட்ட ஆண் - பெண் வேறுபாடு தொடர்பான அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஹாவார்ட் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் இணைந்து உலகிலுள்ள அனைத்து நாடுகளும் உள்ளடங்கும் வகையில் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் விசேட வைத்திய நிபுணர் கபில ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நான்கு பிரதான பிரிவுகளின் கீழ் பெண்களுக்கு சமூகத்தில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் தொடர்பில் கண்காணிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், அரசியல், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய நான்கு துறைகளின் கீழ் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இலங்கைக்கு 31 ஆவது இடம் கிடைத்துள்ளது. அயல் நாடான இந்தியாவுக்கு 113 ஆவது இடமும், சீனாவுக்கு 61ஆவது இடமும் கிடைத்துள்ளன. இந்த அறிக்கைக்கு அமைய ஐஸ்லாந்து முதலாவது இடத்திலும், நோர்வே இரண்டாவது இடத்திலும், பின்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.