Header Ads



கட்டாய மதமாற்றம் இஸ்லாத்திற்கு விரோதமானது

பாகிஸ்தானில் மதச் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றத்தில் இருந்து பாதுகாக்க, வலுவான சட்டம் தேவை என அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களில் இந்து இளம்பெண்கள் கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சில வழக்குகள் சுப்ரீம் கோர்ட் வரை சென்றுள்ளன. இந்நிலையில், மதச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்து, தேசிய நல்லிணக்க அமைச்சர் அக்ரம் மஷிஹ் கில் கூறியதாவது,

இது போன்ற கட்டாய மதமாற்றங்கள், இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானவை. மதச் சிறுபான்மையினரை கட்டாய மதமாற்றத்தில் இருந்து பாதுகாக்க, வலுவான சட்டம் ஒன்று தேவை. அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன், இஸ்லாமிய மத கவுன்சில் மற்றும் மத்திய ஷரியா கோர்ட் ஆகிய இரு அமைப்புகளும் கட்டாய மதமாற்றம் இஸ்லாத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்.

கட்டாய மதமாற்றத்தைக் கண்காணித்து தடுக்கும் வகையில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எம்.பி.,க்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தகைய சட்டத்தின் முன்வரைவு, ஜூன் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின் பார்லிமென்டில் தாக்கல் ஆகலாம், என்றார்.

No comments

Powered by Blogger.