ஊடகவியலாளர் மீது ஏன் இந்த கொலைவெறி? கிளேமோரை விட ஆபத்து என்கிறர் அமைச்சர்
ஊடகவியலாளர்கள் கிளேமோரை விட ஆபத்தானவர்கள். ஒரு விடயத்தையோ நபரையோ முழு அளவில் அமைதியாகவும் அல்லது முழு அளவில் அங்கவீனமாக்கவும் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்குமே முடியும் என்று பதில் ஊடக அமைச்சரும் பிரதி பொருளாதார அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
செனல் 4 போன்ற சர்வதேச ஊடகங்கள் சர்வதேச சூழலை புரட்டிப் போட்டு விடுகின்றது. எனவே ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியுடனும் உள்நாட்டில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திகளையும் வெளியுலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஊடக அமைச்சில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
ஊடகங்கள் மிகவும் ஆபத்தானவை. எனவே தான் செனல் 4 போன்ற ஊடகங்கள் நேர்மையற்ற வகையில் பிரசாரங்களை செய்து சர்வதேச சூழலை புரட்டிப்போட்டு விடுகின்றன. எவ்வாறாயினும் ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முழுமையான பயனை நாடு அடையும்.
நாடு முன்னெடுக்கின்ற அபிவிருத்திப் பணிகள் மற்றும் நலன்புரி விடயங்கள் என்பவற்றை வெளியுலகிற்கு கூற வேண்டும். அப்போதுதான் இலங்கை தொடர்பில் சாதகமான புரிந்துணர்வை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் எனக் கூறினார்.
Post a Comment