Header Ads



ஒபாமா துன்பியல் நிகழ்வு எனக்கூறினால் போன உயிரும், பட்ட கஷ்டமும் திரும்பி வருமா..?

ஆப்கான்,  கந்தஹாரில் இடம்பெற்ற படுகொலை தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். ஆப்கான் ஜனாதிபதி ஹமிட் ஹர்சாயை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்ட அமெரிக்க ஜனாதிபதி, இந்த சம்பவத்திற்கு தமது இரங்கலை தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க படைவீரர் ஒருவர், கந்தஹாரிலுள்ள 2 வீடுகளின் மீது நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 9 சிறுவர்கள் உட்பட 16 பேர் நேற்றைய தினம் கொல்லப்பட்டிருந்தனர்.

துன்பியல் மற்றும் அதிர்ச்சிதரும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் பரக் ஒபாமா உறுதிளிளித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமிட் ஹர்சாய், இது குறித்து விளக்கம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் உளநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் குறித்த தாக்குதல் சந்தேகநபர் கந்தஹார் மாகாணத்தின் பஞ்வாய் மாவட்ட படைத்தளத்திற்கு திரும்பியுள்ளதுடன், தானாகவே சரணடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்கப் படைத்தளமொன்றில் அல் குர்னானின் பிரதிகள் எரிக்கப்பட்டதால் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, சில வாரங்கள் கடந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தலைநகர் காபூலுள்ள நேட்டோ படைத்தளத்தின் அமெரிக்க அதிகாரிகள்  இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

No comments

Powered by Blogger.