Header Ads



ஆப்கானிஸ்தானில் அல்குர்ஆன் எரிப்பு - அமெரிக்கா இராணுவத்திற்கு நேரடி சம்பந்தம் - விசாரணையில் அம்பலம்


ஆப்கானில் புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்த சம்பவத்தை குறித்து விசாரணை நடத்திய நேட்டோ கமிஷன் பல  அமெரிக்க வீரர்களுக்கு பங்கிருப்பதாக அறிக்கை அளித்துள்ளது. இத்தகைய வெறித்தனமான செயலை புரிந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.

விசாரணை அறிக்கையில் குற்றவாளிகள் என்று கண்டுபிடிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு எத்தகைய தண்டனை வழங்கப்படும் என்பது குறித்து தீர்மானிக்கவில்லை என்று ஆஃப்கானிஸ்தான் உயர் அமெரிக்க கமாண்டர் ஜெனரல் ஜான் அலன் கூறியுள்ளார்.

ஆறு அமெரிக்க ராணுவத்தினருக்கும், ஒரு ஆஃப்கான் குடிமகனுக்கும் சம்பவத்தில் பங்கிருப்பது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்று எ.எஃப்.பி கூறுகிறது.

பக்ராம் ராணுவ தளத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி அமெரிக்க ராணுவத்தினர் புனித திருக்குர்ஆன் பிரதியை எரித்தனர். சம்பவத்தை தொடர்ந்து ஆஃப்கானில் ஏற்பட்ட மக்களின் கொந்தளிப்பில் 6 அமெரிக்க ராணுவத்தினர் உள்பட 40 பேர் கொல்லப்பட்டனர். ஆஃப்கானில் கிளம்பிய கடும் எதிர்ப்பை தொடர்ந்து உயர் அதிகாரிகளை ஆஃப்கானில் இருந்து நேட்டோ வாபஸ் பெற்றது.

உலகம் முழுவதும் முஸ்லிம்களின் உணர்வுகளை கடுமையாக காயப்படுத்திய இந்த வெறித்தனமான சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மன்னிப்பு கோரினார்.

No comments

Powered by Blogger.