இலங்கைக்கு ஆதரவாக ஜும்ஆ பிரசங்கம் நடத்துமாறு ஜம்இய்யதுல் உலமா சபை கோரிக்கை
ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் பிரேரணைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கங்களை அமைக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சகல உலமாக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக உலமா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் குறிப்பிடுகையில், இன்று நாட்டில் அமைதி, சமாதானம் நிலவுகின்றது. அச்சம், பீதியின்றி நாட்டின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நடமாட முடிகின்றது. முழு நாட்டிலும் துரித அபிவிருத்தி ஏற்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நாட்டில் சுபீட்சமும், மறுமலர்ச்சியும் ஏற்பட்டு வருகின்றது. இந்நாட்டில் வாழுகின்ற எல்லா மக்களும் ஒற்றுமையாக இலங்கையர் என்ற அடிப்படையில் வாழுகின்றனர்.
சுமார் முப்பது வருடங்களுக்கு பின்னர் இந்நாட்டில் இவ்வாறான சிறப்பான சுபீட்ச நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. இதனைக் குழப்பவே அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் முயற்சி செய்கின்றன.
ஆனால் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஆப்கானிஸ்தான், ஈராக், பலஸ்தீன் போன்ற நாடுகளில் எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு இழைத்துள்ள அநியாயங்களும், கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அந்நாடுகளையே சீரழித்து விட்டன.
ஆகவே அப்படியான ஒரு நிலைமை எமது நாட்டில் ஏற்படாதிருப்பதற்காக இன்று ஜும்ஆ பிரசங்கங்களை அமைத்துக் கொள்வதோடு துஆ பிரார்த்தனையிலும் நாட்டுப்பற்றுடன் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம் என்றார்.
be silent on this matter
ReplyDeleteகாலத்தின் தேவை.
ReplyDeleteமுஸ்லீம் சமூகம் தொடர்ந்தும் கழுவுற நீரில் நழுவுற மீனாக இருக்க முடியாது.
காத்திரமான பங்களிப்பு தேவை.
A good call from ACJU.
ReplyDeleteEvery muslim and every Jummah Musjid should act acordingly.
Musilms cannot be silent on this issue at all.
This is our country and LTTE was our prime enemy.
Sri Lankan Muslim
உங்களின் தீர்மாணம் TAMIL மக்களுக்கு எதிரானதாகக்தான் முடியப்போகிரது முன்னர் முஸ்லீம் சிங்களவர் கலவரத்தில் எத்தனய்யோ முஸ்லீம்கள் கொள்ளப்பட்டது தெரியாதா ஆனால் சாதாரன THAMIL மக்களால் இது நடக்கவில்லய் L T T E யால் எத்தனய்யோ மாற்று இயகங்கள் கொள்ளப்பட்டு அவர்களின் குடும்பங்கள் துரத்தப்பட்டார்கள் அப்பவும் எம்மால் எதுவும் செய்யமுடியவில்லய்
ReplyDeleteமொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற விதமாக
ReplyDeleteபேசக் கூடாது.
கோழைகள் போலவும் பேசக் கூடாது.
அதற்காக வீண் சண்டித்தனம் பண்ணவும் தேவையில்லை.
சிங்களவர் முஸ்லிம்கள் கலவரத்தில் ஆயிரக்கணக்கிலா முஸ்லீம்கள்
கொல்லப்பட்டனர்? புள்ளிவிவரம் தர முடியுமா?
வெறுமனே மொட்டையாக சொல்லக் கூடாது.
கலவரத்தில் ஒன்றோ இரண்டோ அல்லது நான்கைந்து பேரோ
கொல்லப்படுவது என்பதும் திட்டமிடப்பட்ட ரீதியில்,
ஒழுங்கமைக்கப் பட்ட தாக்குதல் மூலம் தாயின் வயிற்றிலிருந்து
வெட்டி எடுக்கப்பட்ட சிசு முதல் தள்ளாடும் வயோதிபர் வரை
நூற்றுக்கணக்கிலும், அல்லாஹ்வின் இல்லத்தில் தொழுகையில் இருக்கும் பொழுது
இன்னும் நூற்றுக்கணக்கிலும் என்றும், இப்படியாக பற்பல ஊர்களில் நூற்றுக்கணக்குகளில்
மொத்த எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தாண்டும் வகையில் கொள்ளப்பட்டதும் ஒன்றா?
இவற்றை ஒப்பிட முன் கொஞ்சமாவது சிந்தித்திருக்க வேண்டாமா?
72 000 முஸ்லீம்கள் உடுத்த உடையுடன் வெறும் கையுடன் விரட்டப் பட்டார்களே,
இதெல்லாம் எங்கே போய்ப் பதிவது?
பல்லுவலியும் தலைவலியும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள்
செய்திகளை ஒழுங்காக வாசிக்க வேண்டும், நுனிப்புல் மேய்ந்து விட்டு
கருத்துச் சொல்லக் கூடாது. யார் இங்கே சாதாரண தமிழ் மக்களை எதிர்த்தது?
சாதாரண தமிழ் மக்கள் நமது நண்பர்கள்.
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகின்ற வேலையை விடுங்கள்.