உலகின் பணக்கார பல்கலைக்கழகமாக இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் தெரிவு
இங்கிலாந்து நாட்டின் பல்கலைகழகமான கேம்பிரிட்ஜ் பல்கலை கழகம் அதிக சொத்துவைத்துள்ள பல்கலை கழகத்தின் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. மற்றொரு பல்கலைகழகமான ஆக்ஸ்போர்டு பல்கலைகழத்தை தவிர, இங்கிலாந்தில் உள்ள மற்ற பல்கலைகழகங்களை காட்டிலும் இரண்டு மடங்கு சொத்து மதிப்பு அதிகம் என டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதன் சொத்து மதிப்பு சுமார் 4 பில்லியன் பவுண்டுகளாகும். அதே போல் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் எண்ணி்க்கையும் அதிகமாகும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை மொத்தம் 30 ஆயிரம் ஆகும். ஆக்ஸ்போர்டு பல்கலை.,யின் சொத்து மதிப்பு சுமார் 3.3 பில்லியன் பவுண்டுகளாகும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தில் 65.8 சதவீதம் வெள்ளையர்கள் ஊழியர்களாகவும், 9 ஆயிரத்து 147 பேர் ஆப்ரிக்க கறுப்பின மக்கள் மற்றம் கரீபியனை சேர்ந்தவர்கள் ஊழியர்களாவும் பணிபுரிந்து வருகி்ன்றனர். அதற்கடுத்த இடங்களில் சீனா மூன்று சதவீதமும் இந்தி்யா 2 சதவீதமும் ஊழியர்களாக பணிபுரி்நது வருகின்றனர். பல்கலைகழகத்தின் அனைத்து துறைகளிலும் சேர்த்து 75 சதவீத ஆண்கள் பேராசிரியர்களாகவும், 60 சதவீத பெண்கள் பேராசிரியர்களாகவும் பணிபுரிவதாக டெய்லி மெயில் பத்திரிகை தகவல் வெளியிட்டு்ள்ளது.
Post a Comment