Header Ads



கால் தவறி கீழே விழுந்த இலங்கையர் குவைத்தில் வபாத்தானார்

குவைத்-அஹமதி நகரில் பல்கூட்டு மாடிக் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்து இலங்கையைச் சேர்ந்த ஒருவர் மரணமாகியுள்ளார்.

கிண்ணியா -4, குட்டிகராச்சியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அலிபுஹான் பஸீர் (வயது 35) நபரே இவ்வாறு பலியாகியுள்ளார். இவரது ஜனாஸா நல்லடக்கத்தை குவைத்தில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குவைத்தில் இருக்கும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காலங்களில் இலங்கையர்கள் பல்வேறு சம்பவங்களில் வெளிநாடுகளில் மரணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.