Header Ads



ரிசானாவின் விடுதலைக்கு எதிராக சர்வதேச ஊடகங்கள் சதி - அமைச்சர் டிலான் பெரேரா



சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள சகோதரி ரிசானா நபீகின் விடுதலைக்கு தடையாக இரண்டு ஊடகங்கள் செயற்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றுள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ரிசானாவை விடுவிப்பதற்கான முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் அவரை விடுவிக்கவிடாமல் 2 வெளிநாட்டு ஊடகங்கள் செயற்படுகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ரிசானாவை விடுவிப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டார்.

ரிசானா விடுதலையாகின் அதற்கான பெருமையை எவர் வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

1 comment:

  1. அந்த இரண்டு கேடு கெட்ட ஊடகங்களும் எவை
    என்று தெரியுமா?

    ReplyDelete

Powered by Blogger.