முஸ்லிம்களை பாராட்டும் விமல் வீரவன்ச - அமெரிக்க பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டமும் ஆரம்பமாகியது (படங்கள் இணைப்பு)
அமெரிக்க உற்பத்திப் பொருட்களான குறிப்பாக கொக்கோகோலா, பெப்சி ஆகியவற்றை பகிஷ்கரிக்குமாறு பொதுமக்களை கோரும் செயற்பாட்டில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்னாள் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தினர் பிரசார நடவடிக்கையில் ஈடுபடுவதை படங்களில் காணலாம்.
ஜெனீவாவில் அமெரிக்கா பெற்ற வெற்றியை அமுல்படுத்த இலங்கை மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு நிர்மாண பொறியியல் துறை அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக இடம்பெற்ற பொது கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த
நாட்டு முஸ்லிம்களை நான் பாராட்டுகிறேன். நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்பட்ட போது, முழு
முஸ்லிம் சமூகமும் ஒரு தலைப்பட்ச கருத்தில் எதுவித சலனமுமின்ற அமெரிக்காவின்
தீர்மானத்திற்கு எதிர்பபு தெரிவித்தனர்” என்றார்
Post a Comment