Header Ads



நொறுக்குத் தீனிகளில் கலப்படம் - எச்சரிக்கும் ஆய்வு

சில முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் உணவு பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளில் தேவையற்ற மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கலப்படங்களின் அளவு அதிகமாக இருப்பதாக டெல்லியில் உள்ள அரசு சாரா அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஒன்று தெரிவித்துள்ளது.

மேலும்,  மிகவும் பிரபலமான சில நிறுவனங்களின் தயாரிப்புக்களை இந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக மேகி, டாப் ராமன் நூடுல்ஸ், மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சிஸ் பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை சோதனை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது. ஆனால், விளம்பரத்திற்காக இந்த நிறுவனங்கள் கூறும் முதல் வார்த்தை கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்று இயற்கையான மற்றும் 100 சதவீதம் இயற்கையானது என்று பல்வேறு பொய்களைக் கூறி விற்பனை செய்கிறது.

மேலும், இந்த பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு என்பது இதயத்தில் உள்ள வால்வுகளின் பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது. மேலும், இளம் வயதிலேயே நிறைய பேர் ஒபிசிடி, டயாபெட்டிஸ் போன்ற வியாதிகளுக்கு ஆளாவதில் இந்த கலப்படங்கள் பங்கு வகிப்பதால் இயன்ற வரை இது போன்ற உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிருக்கிறது அந்த நிறுவனம்.

1 comment:

  1. remove the pic. otherwise u may have meet leagal action. wE NEED THE SERVICE OF THIS FASTLY GROWING WEBSITE

    ReplyDelete

Powered by Blogger.