அரிய வாய்ப்பு - இந்த அமைச்சருடன் நீங்களும் விவாதம் நடத்தலாம்
தனிநபர் ஒருவர் உணவு உண்டு உயிர் வாழ மாதாந்தம் 2 ஆயிரத்து 500 ரூபா போதுமானதென நிரூபிக்க பொருளாதாரம் தொடர்பாக கற்றறிந்த ஒருவருடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபடத் தான் தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அண்மையில் மூன்று பேரைக் கொண்ட குடும்பமொன்றுக்கு மாதாந்தம் 7500 ரூபா வருமானம் போதுமானதென அமைச்சர் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து அது தொடர்பாக இணையத்தளங்களிலும் மற்றும் ஊடகங்களிலும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருககின்றது.
இந்த நிலையில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயம் குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்க முடியுமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து விளக்கமளித்த அமைச்சர்,
ஒரு மனிதன் உயிரிழக்காமல் உணவு உண்டு நீர் அருந்தி உயிர்வாழ மாதத்திற்கு 2500 ரூபா போதுமானது என்ற கருத்தையே தெரிவித்தேன். இதில் உடை, தங்குமிடம் , மின்சாரக் கட்டணம், நீர் கட்டணம் என்பவற்றை கருத்தில் கொள்ளவில்லை.
ஒருவருக்கு மாதாந்தம் 41. 33 வீதம் உணவு, நீர் ஆகியவற்றிற்கு செலவாகின்றது. அந்த தொகையே 2500 ரூபா. இதற்கு மேலதிகமாக மின் கட்டணம், எரிபொருள் கட்டணம் அடங்கலாக பல கட்டணங்களுக்கு 21 வீதமும் உடைகளுக்காக 3. 12 வீதமும் மற்றும் ஏனைய செலவுகளுக்காக 12. 72 வீதமும் செலவாகிறது. நான் கூறியது இவற்றைத் தவிர்த்து உணவு, நீர் ஆகியவற்றுக்கான செலவை மட்டுமே.
இதேவேளை நாட்டில் பல விடுதிகளில் பாடசாலை மாணவர்களை அவ்வாறு 2500 ரூபாவில் வாழ வைக்கின்றோம். மூன்று பேரைக் கொண்ட குடும்பத்திற்கு 7500 ரூபா உயிர் வாழப் போதுமானதென பொறுப்புடனே கூறியுள்ளேன். இதன்படி 15 வருடங்களாக பொருளாதாரத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளதால் பொருளாதாரம் தொடர்பாக கற்றறிந்த ஒருவருடன் இந்த விடயம் குறித்து பகிரங்க விவாதம் நடத்த தயார் எனத் தெரிவித்தார்.
வேலை கேட்ட சோமாறி நாய்.
ReplyDeleteஇவனுக்கு தெரிஞ்ச மண்ணாங்கட்டி.
இவனைப் பற்றி எழுதியே பேப்பர்களின் தாள்கள் எல்லாம் சுத்த வேஸ்ட்.
இது போதாது என்று தொலைக்காட்ச்சியில் இவனது பைத்தியகார
அறுவை அலட்டலுக்கு விவாதம் என்று பெயர் வைத்து தொலைக்காட்ச்சிகளின்
நேரத்தை வீணடிக்க இடமளிக்க வேண்டாம்.
இவன் தேசிய இழுக்கு, அவமானம்.
ivarda sambalam 2.500 pannina welangum.appa thaan ivar paadam padiparu...........
ReplyDelete