ஒரே குற்றத்திற்கு இரு தடவை தண்டனையளிக்க முடியாதாம் - ஹைகோர்ப் வழக்கிலிருந்து சரத் பொன்சேகா விடுவிப்பு
ஹைகோர்ப் வழக்கிலிருந்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.
இராணுவ நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் ஹைகோப் வழக்கு தேவையற்றது என சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறிப்பிட்டார். இதனால் ஒரே குற்றத்திற்கு இரு நீதிமன்றில் தீர்ப்பு வழங்க என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இக்கருத்துக்களை பரிசீலித்த நீதிபதி சுனில் ராஜபக்ஷ், ஹைகோப் வழக்கில் இருந்து சரத் பொன்சேகாவை விடுவித்து தீர்ப்பளித்தார்.
Post a Comment