சிங்களவரும், தமிழரும் வீராப்பு பேசி பயனில்லை - விமல் வீரவன்ச கேலிக்ககூத்தாட்டம் - ரவூப் ஹக்கீம்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை எமது நாட்டில் இனங்களுக்கிடையிலான விரிசலை மேலும் படுமோசமாக அதிகரித்துள்ளது என நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தமிழர் தரப்பிலும் சிங்களவர் தரப்பிலும் சிலர் வீராப்புப் பேசிக் கொண்டிருப்பது இந்நாடு சகஜ நிலைக்குத் திரும்புவதை மேலும் காலதாமதப்படுத்துகிறது. இதற்கு இந்த தீவிரவாத சக்திகள் துணை போகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொறுப்பு வாய்ந்த உறுப்பினர்கள் ஜெனீவா தீர்மானத்துக்குப் பின்னரான கள நிலைவரத்தைக் கவனமாக கையாள வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும். தமிழகத்திலிருந்து சுமந்திரன் எம்.பி.விடுத்துள்ள அறிக்கையின் சில அம்சங்கள் வரவேற்கத்தக்கன.
வடக்கு கிழக்கில் இராணுவ மயப்படுத்தலைக் குறைக்க வேண்டுமென்ற கோரிக்கை வரவேற்கத்தக்கது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரையில் இதற்கு உடன்படுகிறது.
இதேவேளை, ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்பு ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் புலம்பெயர் தமிழ் சமூகம் மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுத்து களம் அமைத்துக் கொடுக்க முயற்சிக்கின்றன என்ற பீதியைக் கிளப்பிவிட்டுள்ளன. இதன் மூலம் இராணுவத்தை வடக்கு , கிழக்கிலிருந்து அப்புறப் படுத்தக்கூடாது என்று அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது. இது ஜெனிவா பிரேரணையின் பக்க விளைவாகும்.
ஏற்கனவே இருக்கின்ற உள்ளூர் கள நிலவரங்களை மேலும் குழப்பிவிட்டு தீர்வுகளை நோக்கிய நகர்வுகளை சிக்கலாக்குவதற்கு இக்கட்சிகளின் செயற்பாடுகள் காரணமாய் அமைந்துள்ளன. மேர்வின் சில்வா போன்றவர்கள் வழமை போல் காட்டுத் தர்பார் வசனங்களைப் பேசத் தொடங்கியுள்ளார்கள். இது ஆரோக்கியமானதல்ல. இதே போன்று அமைச்சர் விமல் வீரவன்ச அமெரிக்கப் பண்டங்களைப் பகிஷ்கக்கும் படி கடப்பாடு போடுவது அப்பட்டமான கேலிக் கூத்தாகும்.
எமது பலம், பலவீனம் என்ன என்று தெரியாமல் வெறும் வாய்ச்சவாடல்களால் இராஜதந்திர செயற்பாடுகளை நாம் வீணே பாழ்படுத்தக் கூடிய அவசியமில்லை. நாட்டில் சட்டத்தையும், ஒழுங்கையும் அமுல் படுத்தும் அரசின் அமைச்சர் ஒருவரே வாய்க்கு வந்த படி பேசுவது அனுமதிக்கப்பட முடியாது. தேசத்துரோகிகளின் கால்களை உடைப்போம், நொருக்குவோம் என்பது ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் கஷ்டத்துக்குள் தள்ளிவிடும் செயலாகும்.
சிக்கலாக்கி விடும் சர்வதேச சமூகம் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட்டு தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டது என்பதற்கான அதன் உள்நோக்கங்கள் இராஜதந்திர ரீதியாக புரிந்து கொள்ளப்பட வேண்டியுள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வதுதான் ஜெனீவா பிரேரணையின் நோக்கமாக இருந்தால் அவசரமான இப்படியான நடவடிக்கைகள் அந்தத் தேவையின் இலக்கை அடைவதை இன்னும் சிக்கலடையச் செய்யும் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற ரீதியிலும், நீதியமைச்சர் என்ற அடிப்படையிலும் நான் ஜெனிவா செல்ல நேர்ந்தது. உள்நாட்டு கள நிலைவரங்களின் யதார்த்த நிலையை விளக்குவதே எனது நோக்கமாக இருந்ததேயொழிய வெற்று வாக்குறுதிகளை வழங்கிவிட்டு வருவது எங்கள் நோக்கமாக இருக்கவில்லை
அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் அவர்களின் முழு இராஜதந்திர பலத்தையும் பிரயோகித்து இந்தியாவை அவர்களுக்கு சார்பாக வாக்களிக்க வைத்ததைத் தவிர வேறு எதனையும் பெரிதாக சாதித்துவிட்டதாக கூறடியாது எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் அவர்களின் முழு இராஜதந்திர பலத்தையும் பிரயோகித்து இந்தியாவை அவர்களுக்கு சார்பாக வாக்களிக்க வைத்ததைத் தவிர வேறு எதனையும் பெரிதாக சாதித்துவிட்டதாக கூறடியாது எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
Post a Comment