Header Ads



யாழ் முஸ்லிம் இணையத்தின் விளக்கம்..!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மாற்றுமத சகோதரர்களுக்கு முஸ்லிம்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் சில செயற்றிட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளதாக நாம் அறிவிப்புச்செய்திருந்தோம்.

எமது இந்த செய்தியை சில தமிழ் இணைய ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்தியுள்ளதையிட்டு கவலையடைகிறோம்.

புனித இஸ்லாம் மார்க்கம் சாந்தி, சமாதானத்தை விரும்பும் மார்க்கமாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களும் அவ்வாறே தமது பிரதேசங்களில் வாழும் மாற்றுமத சகோதரர்களுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இன்றைய உலகில் நிலவும் பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணம் மதங்கள் குறித்த தவறான விளக்கங்களேயாகும். இந்நிலையில்தான் இந்திய தமிழ்நாட்டில்கூட இஸ்லாம் பற்றி மாற்றுமத சகோதரர்களிடையே விளக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதன்மூலம் இனமோதல்கள் தவிர்கப்பட்டு ஒற்றுமை வளர்க்கப்பட்டுள்ளது,

இவ்வாறான ஒரு அங்கமாகவே யாழ்ப்பாண பலாலி ஆசிரியர் கலாசாலையிலும் மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாம் பற்றி அண்மையில் எடுத்துக்கூறப்பட்டிருந்தது. இதனால் பல மாற்றுமத சகோதரர்களிடம் இஸ்லாம் பற்றிய தெளிவு ஏற்பட்டது.

இதையொத்த ஒரு தெளிவை யாழ்ப்பாண மாற்றுமத சகோதரர்களிடம் ஏற்படுத்தும் நோக்குடன்தான் புலம்பெயர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம் சகோதரர்கள் ஏற்படுத்த முயன்றனர். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் ஒற்றுமை மேலும் உறுதிசெய்யப்படுமென்பதும் ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கையாக இருந்தது. இந்த தீர்மானத்திற்கு பல யாழ்ப்பாண தமிழ் சகோதரர்கள்கூட வரவேற்புத் தெரிவித்திருந்தனர்.

இவ்வவாறன ஒருநிலையில்தான் சில தமிழ் ஊடகங்கள் எமது செய்தியை தவறாக அர்த்தப்படுத்தியுள்ளன என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இஸ்லாம் பற்றிய சந்தேகங்கள் மாற்றுமத சகோதரர்களுக்கு இருக்குமாயின் அவர்கள், இணையத்தளங்கள் மூலம் அவற்றிக்கு விளக்கம் பெற்றுக்கொள்ள முடியுமென்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

1 comment:

  1. TAMILCNN EDITOR இதை வாசித்து விழங்கி கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்-Miyad

    ReplyDelete

Powered by Blogger.