யாழ்ப்பாணம் - கொழும்பு பஸ் சேவையில் பயணிகளுக்கு தொடரும் இடையூறுகள்
யாழ்ப்பாணம் கொழும்பு பயணிகள் சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் இடைநடுவில் ஏற்றப்படும் பயணிகளால் பெரும் பாதிப்புக்களை தாம் எதிர் கொள்வதாக ஏற்கனவே ஆசனப் பதிவு செய்து செல்லும் பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
சிறிய தொகை வருமானத்துக்காக இவ்வாறு இடைநடுவில் ஏற்றப்படும் பயணிகளால் தமது பெருமளவு தொகை இழக்கப்படுவதுடன் பல்வேறுபாதிப்புகளை தாம் எதிர் கொள்ள நேரிடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும் இச் சம்பவங்கள் தொடர்பாக பேருந்து சாலைகளுக்கு முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை எனவும் இதனால் தொடர்ந்தும் தாம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட பயணிகள் போக்குவரத்து சேவையில் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் குறிப்பிட்டதாவது,
கடந்த திங்கட்கிழமை இரவு ஏழு மணிக்கு கொழும்பிலிருந்து யாழ். நோக்கி புறப்படும் பயணிகள் போக்குவரத்துச் பேருந்தில் ஆசனப்பதிவை பெற்மேற்கொண்டு பயணம் செய்திருந்தேன். அண்மையில் இந்தியாவிற்கு சென்று பல ஆயிரம் ரூபா பெறுமதியான புடவைகளை வாங்கிக் கொண்டு வந்தேன் இப்பயணத்தின் போது அங்கிருந்து கொண்டுவரப்பட்ட புடைவைகளையும் ஏற்றிக் கொண்டு பிரயாணம் செய்து கொண்டிருந்தேன்.
இவ்வாறு பயணம் செய்து கொண்டிருக்கையில் இடை நடுவில் பல இடங்களிலும் பயணிகள் ஏற்றப்பட்டனர். குறிப்பாக புத்தளம் மற்றும் அனுராதபுரப்பகுதியில் பயணிகளை ஏற்றி இறக்கி வந்தனர். இந் நிலையில், அனுராதபுரம் பகுதியில் நாம் பயணித்த வாகனம் பழுதடைந்தமையால் உடனடியாக பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். நானும் இறங்கி நிற்குமாறு கேட்கப்பட்டேன்.
தொடர்ந்து குறித்த வாகனத்தின் திருத்த வேலைகள் முடிவடைந்தவுடன் பயணிகளை ஏறுமாறு கூறப்பட்டது. அவ் வேளை ஏறிப் பார்த்த போது பேரதிர்ச்சி ஏற்பட்டது அதாவது நான் கொண்டு வந்த பொருட்கள் முழுவதும் காணாமல் போயிருந்தன.
இச் சம்பவம் தொடர்பாக உடனடியாகவே நடத்துநருக்கு தெரிவிக்கப்பட்டதுடன் வாகனத்தின் பல பகுதிகளிலும் சோதனையிடப்பட்டது. ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. அதாவது இடை நடுவில் ஏற்பட்ட பயணி ஒருவர் வாகன திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் எனது பொருட்களை களவாடிக் கொண்டு சென்று விட்டார். என்பது தெரியவந்தது.
ஆயினும் இதற்கு தாம் ஒன்றும் செய்ய முடியாது என நடத்துநர் கூறியதையடுத்து உடனடியாக இலங்கை போக்குவரத்துசபைக்கு தெரிவிக்கப்பட்டதாக மேற்படி பயணி மேலும் கூறினார்.
Go to POLICE and file a case in court also.
ReplyDeleteThen this will be a good lesson for other buses.