Header Ads



பறக்கும் கார் வருகிறது - அமெரிக்கா அறிமுகப்படுத்துகிறது


மணிக்கு 110 மைல்கள் முதல் 460 மைல்கள் வேகத்தில் பறக்கும் காரை காண வேண்டுமெனில், நியூயார்க்கில் ஏப்ரல் மாதம் 06ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ள நியூயார்க் சர்வதேச வாகனத் திருவிழாவிற்கு செல்லலாம். 

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெராபியூஜியா நிறுவனம் இந்த பறக்கும் காரை தயாரித்துள்ளது. இதுகுறித்து, டெராபியூஜியா நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அன்னா ராசெக் டயட்ரிச் கூறியதாவது, தொழில்நுட்ப அடிப்படையில் இதனை , சாலையில் இயங்கக்கூடிய விமானம் என்று கூறலாம். 

ஏப்ரல் மாதத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ள இந்த காரை, இந்தாண்டு இறுதிக்குள் வர்த்தகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். 279000 அமெரிக்க டாலர்களாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த காருக்கு இதுவரை 100 பேர் முன்பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார். 

No comments

Powered by Blogger.