இலங்கையில் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு - தடுப்பதற்கு ஒடிவருகிறது அமெரிக்கா
இலங்கையில் அதிகரித்து வரும் பாலியல் சார்ந்த துஸ்பிரயோகங்களை தடுக்க, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிறுவனம் உதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. இதன் படி பாலியல் துஸ்பிரயோகங்களை, விசாரணை செய்ய தடயவியல் நிபுணர்களின் திறமைகளின் மூலம் குற்றவாளிகளை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.
இத் திட்டத்திற்கு அமெரிக்கா உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. மேலும் இலங்கையில் குறிப்பாக வடக்கில் சிறுவர்கள் பெருமளவில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகி வருவது அதிகரித்து வருகின்றது.
இது தொடர்பாக ஜந்து நாடுளை சேர்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் , பாலியல் வன்முறைகளை தடுப்பது எவ்வாறு என்பது குறித்து கொழும்பில் அண்மையில் விசேட கருத்தரங்கொன்று நடைபெற்றுள்ளது.
இக்கருத்தரங்கில்,தடயவியல், இரசாயன பகுப்பாய்வு மற்றும் மருத்துவ துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளனர்.பாலியல் வன்கொடுமைகளை விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்படுவதன் மூலம் வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியும் என இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐந்து நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் இந்த விசேட கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.
ஓநாய் உபதேசம் பண்ணத் தொடங்கினால்,உடனே உன் கோழிக் குஞ்சுகளை பத்திரமாக அடைத்து வை.
ReplyDelete