Header Ads



இந்தோனேசியா அரசாங்கத்தின் அதிரடித் திட்டம் - பெண்களுக்கு மாத்திரமே சம்பளப் பணம்


இந்தோனேசியாவில் அரசு பணிகள் மேற்கொள்ளும் ஆண்கள் தங்களது சம்பள பணத்தை கள்ளக்காதலி மற்றும் விபசாரிகளிடம் செலவு செய்வதாக கூறப்படுகிறது. அது போன்று பணத்தை ஊதாரி தனமாக செலவிடுவதால் குடும்பத்தை நடத்த முடியாமல் அவர்களது மனைவிமார்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். 

இது குறித்து அரசிடம் ஊழியர்களின் மனைவி மார்கள் புகார் செய்தனர். இது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வடக்கு சுலாவேசி தீவில் உள்ள உகாரண்டலோ பகுதி நிர்வாகத்தில் அதிக அரசு ஊழியர்கள் கள்ள தொடர்பில் ஈடுபட்டு பணத்தை செலவிடுவது தெரியவந்தது.   

எனவே, அரசு ஊழியர்களின் சம்பள பணத்தை அவர்களது மனைவி மார்களிடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து மனைவிமார்களின் பெயரில் பாங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டு சம்பள பணம் அதில் போடப்பட்டது. 

இந்த நடைமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது 3,200 அரசு ஊழியர்களின் சம்பள பணம் அவர்களது மனைவிகளிடம் இதுபோன்று நேரடியாக ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

No comments

Powered by Blogger.