யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம்களே சின்னப்பள்ளியை நிர்வகிக்க வேண்டும் - பைசர் மௌலவி
யாழ்ப்பாணம் சின்னப் பள்ளிவாசல் விவகாரத்துடன் தொடர்புடைய மௌலவி பைசர் (மதனி - பீ.ஏ.) அவர்களை யாழ் முஸ்லிம் இணையம் அண்மையில் ஸ்கைப் மூலமாக தொடர்புகொண்டு தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியது. இதன்போது தன்பக்க பதில்களை நிதானமாகவும், பொறுமையாகவும் வழங்கினார். அவற்றை இங்கு பதிவு செய்கிறோம்.
பைசர் மௌலவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் விடத்தல் தீவு என சிலர் வாதிடுவதை நாம் அறிவோம். அந்தவகையில் நாம் பைசர் மௌலவியிடம் உங்கள் சொந்த இடம் எது என வினவியபோது, அவர் தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், காமால் வீதியில் வசித்து வந்ததாகவும் தனது வாப்பாவின் பெயர் அலியார் என்றும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து முதல்முதலாக மதீனா சென்று கற்றுத் தேர்ந்தவன் தானே என்றும் தற்போது யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி மற்றும் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் பைசர் மௌலவி யாழ் முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.
யாழ் சின்னப்பள்ளிவாசல் நிர்வாக சபை குறித்து யாழ் முஸ்லிம் இணையம் பைசர் மௌலவியிடம் வினவியபோது, தற்போதைய சின்னப் பள்ளிவாசல் நிர்வாக சபையை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தார். நீர்கொழும்பில் வசிக்கும் எம்.எஸ். ஜீனூஸ் தலைமையில் செயற்படும் யாழ் சின்னப்பள்ளிவாசல் நிர்வாக சபை முறைகேடாக உருவாக்கப்பட்டதாகவும் பைசர் மௌலவி வாதிட்டார்.
2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாண சின்னப்பள்ளி வாசலை தாங்களே மீண்டும் உயிர்ப்பித்ததாக குறிப்பிட்ட அவர், அதற்கு முன்னர் சின்னப்பள்ளி வாசல் வசதியற்ற நிலையிலேயே காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய 9 பேரைக்கொண்ட நிர்வாக சபையையும் உருவாக்கி, வக்பு சபைக்கு அதுபற்றிய தகவல்களை அனுப்பிவைத்தோம். இருந்தபோதும் வக்கு சபையிலிருந்து எமக்கு உரிய பதில் கிட்டவில்லை.
அதேவேளை மறுபுறம் யாழ் சின்னப்பள்ளியை அபிவிருத்தி செய்யும் செயற்பாட்டிலும் நாம் தீவீரம் காட்டினோம். அரபு நாட்டைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் பள்ளிவாசல் அபிவிருத்திக்காக 70 இலட்சம் ரூபாய்களை தருவதற்கும் ஒப்புக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் வெளிமாவட்டங்களில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிலர் யாழ் சின்னப்பள்ளி கட்டிட குழுவொன்றை உருவாக்கினர். அப்போது அவர்கள் இந்த சின்னப்பள்ளி வாசல் நிர்வாக சபையில் தலையிடுவதில்லை என உறுதியளித்திருந்தனர். எனினும் காலப்போக்கில் அவர்கள் நிர்வாகத்தில் கைவத்தனர். அதன்பின்னர் புதிய நிர்வாக சபையை நிறுவினர். அதில் 15 பேர் உள்ளனர். இவர்களில் 15 பேர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியோர் ஆவர். ஏனையவர்கள் தற்போது வெளிமாவட்டங்களில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.
யாழ் சின்னப்பள்ளியில்தான் நான் தற்போதும் தங்கியுள்ளேன். இந்தப் பள்ளியை உயிர்ப்பித்தவன் என்ற அடிப்படையில்தான் நான் அங்கு தங்கியுள்ளளேன். தங்குவதற்கான கூலியை நான் கொடுப்பதில்லை. புதிய நிர்வாக சபையைச் சேர்ந்தவர்களில் சிலர் நாகரீகமற்ற முறையில் என்னுடன் நடந்துகொண்டனர். நாங்கள் கடினப்பட்டு பள்ளியை உயிர்ப்பித்த நிலையில் நீர்கொழும்பில் உள்ளவர்கள் யாழ்ப்பாணம் வந்து பள்ளியை ஆளுவதை நான் விரும்பவில்லை. யாழ்ப்பாணத்தில் குடியிருப்பவர்கள் யாழ் சின்னப்பள்ளி நிர்வாக விடயங்களை கவனிப்பதே சிறந்தது. நீர்கொழும்பில் இருந்து வந்தவர்கள் நிர்வாக விடயங்களை கைப்பற்றி ஒருதலைப்பட்சமாக செயற்படுவதை பார்க்கையில் மனதுக்கு கடினமாக உள்ளது. யாழ் சின்னப்பள்ளி வாசல் புதிய நிர்வாகத்தினர் தப்லிக் ஜமாஆத் பின்னணியில் செயற்படுகின்றனர்.
பைசர் மௌலவியாகிய நான் குர்ஆன், சுன்னா அடிப்படையில் செயற்படுகிறேன். நான் தெஹகீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவன் அல்ல. அவவ்வாறு தெரிவிக்கப்படும் கூற்றுக்கள் பொய்யானவை. யாழ் சின்னப்பள்ளிக்குரிய காணிகளை கொள்ளையடிக்கும் நோக்கமும் என்னிடமில்லை. கடந்த காலங்களில் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்குரிய எந்தச் சொத்தையும் நான் கொள்ளையடிக்கவும் இல்லை. அவ்வாறு என்மீது குற்றம் சுமத்துபவர்கள் அந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக்காட்டுமாறு நான் சவால் விடுக்கிறேன்.
நான் ஒரு தகுதியான மௌலவியே. தகுதியுள்ள அரபிக் கல்லூரியிலேயே ஓதினேன். நான் தகுதியற்றவன் அல்ல. நான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்பதன் நோக்கம் இஸ்லாமிய தஹ்வா பணிக்கேயாகும். தயவுசெய்து என்னை அந்தப் பணியைச் செய்யவிடுங்கள் எனக்கு தொந்தரவு செய்யாதீர்கள் என நான் சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். சிலர் என்னை யாழ் சின்னப்பள்ளியிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள மக்கள் எனக்கெதிரான சதித்திட்டங்களுக்கு நிச்சயம் பதில் கொடுப்பார்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள மாற்றுமத சகோதரர்களை இலக்குவைத்தே எனது தஹ்வா செயற்பாடுகள் அமைந்துள்ளன. அல்லாஹ்வே எல்லாவற்றுக்கும் போதுமானவன். யாழ்ப்பாணத்தில் மீண்டும் குர்ஆன் எரிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுவிடக்கூடாது.
யாழ் முஸ்லிம் இணையமானது எமது மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. எதிர்காலத்திலும் நடுநிலையுடன் யாழ் முஸ்லிம் இணையம் செய்றட வேண்டும் எனவும் பைசர் மௌலவி மேலும் குறிப்பிட்டார்.
To-The website administrator,
ReplyDeleteI personally think this article is not necessary and appropriate for the jaffna muslims right now.This issue had been going for a long time and how the community was divided because of this,all know.
Why do you try to inject something which can burn the community's unity.don't you have any healthy articles which can help something to the people.you should not try to fill up your pages in the form of articles which might harm the community.
Do not publish private news, which is include only one person. If u publish like this articles you have to face many problems to publish more articles personally. I have one opinion, if u have doubt about his birth place you can check his Birth Certificate. As a exact publisher you should follow proper manner, do not publish articles with hesitation.
ReplyDelete