Header Ads



இலங்கையில் சீனா சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகிறது - மங்கள சமரவீர குற்றச்சாட்டு

சீன தொலைதொடர்பு நிறுவனங்கள் இலங்கையில் ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  இலங்கை அரசாங்கம் சீனத் தொலைதொடர்பு கருவிகளைப் பயன்படுத்தி தனிப்பட்ட நபர்களின் தொடர்பாடல் நடவடிக்கைகளை உளவு பார்ப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் குறித்து சீன அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்கவும், மின்னஞ்சல்களை இரகசியமாக பார்வையிடவும் சீனத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களாக இசட். ரீ. ஈ மற்றும் ஹூவேய் ஆகிய நிறுவனங்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு உதவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தொலைபேசி ஒட்டுக் கேட்டல் மற்றும் மின்னஞ்சல் இரகசியமாக பார்வையிடும் நடவடிக்கைகளுக்கு தமது நிறுவன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றமையை அந்தந்த நிறுவனங்கள் அறியுமா என்பது தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கில் உலகின் பல நாடுகளில் இவ்வாறான கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும், அந்த வகையிலான தொழில்நுட்பங்களின் ஊடாக துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுப்பதற்கு கடுமையான சட்ட விதிகள் அமுல்படுத்தப்படுகின்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.