Header Ads



ஜனாஸாவை பார்த்து சாத்தான் எனக்கூறும் பிரான்ஸ் - சட்டநடவடிக்கைக்கு தந்தை ஏற்பாடு

பிரான்சில் குழந்தைகள் உள்பட பலரை கொலைச் செய்ததாக போலீஸ் கூறும் முஹம்மது மீராவின் உடலை அடக்கம் செய்ய அல்ஜீரியா மறுத்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் முஹம்மது மீராவின் உடலை ஏற்றுக்கொள்ளவியலாது என்று அல்ஜீரியா நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாக பாரிஸ் கிராண்ட் மஸ்ஜிதின் இமாம் அப்துல்லாஹ் ஸக்ரி இதனை தெரிவித்துள்ளார்.

இறுதிச் சடங்குகளை பிரான்சிலேயே நடத்த உறவினர்கள் கோரியதாக இமாம் கூறியுள்ளார். மீராவின் உடல் அல்ஜீரியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்று பிரான்ஸ் முன்னர் அறிவித்திருந்தது.

அதேவேளையில் மீராவை கொலைச்செய்த போலீஸ் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகுவோம் என்று அவரது தந்தை முஹம்மது பினலால் கூறினார். இதற்காக பினலால் வழக்கறிஞரை ஏற்பாடுச் செய்துள்ளார். மீராவை கைது செய்யவோ, கொலைச் செய்யவோ பேணவேண்டிய நடைமுறைகளை போலீஸ் கடைப்பிடிக்கவில்லை என்று உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இறந்த உடலை அடக்கம் செய்த உடன் வழக்கு பதிவுச் செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்படும். மயங்கச் செய்வதற்கான வாயுக்களை உபயோகித்து மீராவை போலீஸார் கைது செய்திருக்கலாம். குற்றவாளியை கைது செய்வதற்கான அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள பிரான்சு பாதுகாப்பு ஏஜன்சி ஏன் இவ்வளவு அவசரம் காட்டியது? எனது மகன் தாம் இப்படுகொலைகளை செய்தார் என்பதற்கு போலீசாரிடம் என்ன ஆதாரம் உள்ளது? என பினலால் கேள்வி எழுப்புகிறார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூட மரணத்தண்டனை இல்லாத பிரான்சில் ஆயுள் தண்டனையோ அல்லது நீண்டகால சிறைத் தண்டனையோ வழங்கப்படும் என்று பினலால் கூறினார்.

மீராவின் நடவடிக்கையில் அண்மைக் காலமாக சில மாற்றங்கள் தென்பட்டதாக பினலால் கூறுகிறார். மனோநிலை பாதிக்கப்பட்டவனைப் போல அவன் நடந்துகொண்டான். யார் இதன் பின்னணியில் இருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், வழக்கை பதிவுச் செய்வதற்கான மீராவின் குடும்பத்தினரின் முயற்சியை பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சர் அலைன் ஜாப் கண்டித்துள்ளார்.

’நான் இந்த சாத்தானின் தந்தையாக இருந்தால் மவுனமாக இருந்திருப்பேன்’ என்று ஜாப் கூறுகிறார்.

No comments

Powered by Blogger.