என்றாவது ஒருநாள் நாட்டை காப்பாற்றுவேன் - சரத் பொன்சேக்கா நம்பிக்கை
குண்டர்களாலும், செயற்றிரனற்ற நபர்களாலும் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியுமா என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்டிருந்தபோதே அவர் இந்த கருத்தினை வெளியிட்டிருந்தார்.
ஏழாயிரத்து 500 ரூபா பணத்தைக் கொண்டு மூன்று பேர் கொண்ட குடும்பம், ஒரு மாதம் வாழ்க்கை நடத்த முடியும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும், பஸ் கட்டண அதிகரிப்பினால் பிரச்சினை இல்லை என மற்றுமொரு அமைச்சர் கூறியுள்ளதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பெண் ஒருவரை பாலியல் வல்லுறக்கு உட்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடும் நபர்களாலும் குண்டர்களாலும் நாட்டை முன்னேற்ற முடியுமா என முன்னாள் இராணுவத் தளபதி கேள்வி எழுப்பினார். என்றாவது ஒருநாள் நாட்டை காப்பாற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment