Header Ads



மஹிந்த ராஜபக்ஸ வீட்டுக்குச்செல்ல வேண்டும் - ஐ.நா.வின் முன்னாள் துணைச் செயலர் கூறுகிறார்

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் போர்க்காலத்தில் நடந்த்தாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விஷயங்களில் பொறுப்பு கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஐ.நா மன்றத்தின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைமைச் செயலர் சர் ஜான் ஹோம்ஸ் கூறியிருக்கிறார்.

இலங்கையில் நடந்த்தாக்க் கூறப்படும் இந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் விஷயத்தில், சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் மேலும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கிறது என்ற ரீதியில் எழும் கருத்துக்களுக்கு பதிலளித்த சர் ஜான் ஹோம்ஸ், இதைவிட அதிகமாக என்ன செய்யமுடியும் என்று கூறுவது தற்போதைக்கு கடினமாக இருக்கிறது, ஐநா மன்றத் தலைமைச்செயலர் நியமித்த வல்லுநர்கள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துவிட்ட்து. அது வெளிப்படையாக பொதுமக்கள் பாவனையில் இருக்கிறது என்றார்.

மேலும் அவர் கூறுகையில், இப்போது மேலதிகமாக ஏதாவது செய்யவேண்டும் என்றால் அதற்கு இலங்கை அரசின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பதுதான் இப்போதுள்ள பிரச்சினை என்றும் அவர் கூறினார்.

"இந்த விசாரணைகள் மூலம் சர்வதேச நாடுகள் தன்னைக் குறிவைப்பதாக இலங்கை அரசு நம்புகிறது; அவர்களை இதில் யாரும் குறி வைக்கவில்லை. ஆனால் அவர்களின் கடந்தகால நடவடிக்கைகள்தான் இந்த விசாரணைகள் கவனம் செலுத்தும் கருப்பொருள். எனவே அவர்கள் இந்த முயற்சிகளுக்கு, அதாவது ஒரு புதிய விசாரணைக்கு, முழுதாக ஒத்துழைக்கமாட்டார்கள். எனவே நாம் இந்த அரசு மாறும்வரை பொறுத்திருக்கவேண்டும். அதன் பின்னர் வரும் புதிய அரசில் இருப்பவர்கள் இதற்கு ஒத்துழைத்தால்தான் நாம் உண்மைகளை வெளிக்கொண்டுவரலாம்", என்றார் ஜான் ஹோம்ஸ். - BBC

1 comment:

  1. சேர் உண்மையா சொல்லுங்க....

    புலிகள் தோற்றுவிட்டார்கள் என்ற கடுப்பில்தானே
    இப்படி எல்லாம் விசர் பிடித்து அலைகின்றீர்கள்?

    இல்லாவிட்டால், 1983 இலிருந்தே மனித உரிமை மீறல்களும்
    படுகொலைகளும் நடந்துகொண்டுதானே இருந்தது,
    அப்பொழுதெல்லாம் எங்க சேர் இருந்தீங்க?

    இப்பொழுது யுத்தம் முடிந்து, புலிகள் அளிக்கப்பட்டு, படுகொலைகள் எல்லாம் முடிவுக்கு
    வந்துவிட்ட பின்னர், ஏன் சேர் இப்ப வந்து துள்ளுறீங்க?

    ReplyDelete

Powered by Blogger.