Header Ads



இறுதிப் போட்டிகளில் சொதப்பும் இலங்கை கிரிக்கெட் அணி

ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்ற ஒருநாள் தொடர், ஆஸ்திரேலியாவில் நடந்தது. பரபரப்பான ஒருநாள் தொடரின் மூன்றாவது பைனலில் இலங்கையை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் சாம்பியன் கோப்பையை வென்றது.


பைனல் "அலர்ஜி': இலங்கை அணி பைனலில் தோற்பதை, சமீபகாலமாக வழக்கமாக கொண்டுள்ளது. கடந்த "டுவென்டி-20' உலக கோப்பை பைனலில் தோல்வியடைந்த இந்த அணி, 2010 ஆசிய கோப்பை பைனலில் இந்தியாவிடம் தோற்றது. பின் 2011ல் உலக கோப்பை பைனலில் மீண்டும் தோற்றது. 

தற்போது முத்தரப்பு தொடரின் பைனலில் தோற்று, கோப்பை இழந்தது.
வரலாறு வென்றது: முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணி 19வது முறையாக கோப்பை வென்றது. கடந்த 1990க்குப் பின், எப்போதெல்லாம் மூன்றாவது பைனல் நடந்ததோ, அவை அனைத்திலும் ஆஸ்திரேலியா வென்றது. இது மீண்டும் நிரூபணம் ஆனது. 

வாட்சனுக்கு அபராதம்: நேற்று குறிப்பிட்ட நேரத்தை விட ஆஸ்திரேலிய அணி ஒரு ஓவர் குறைவாக வீசியது. இது, கிரிக்கெட் விதி 2.5.1ஐ மீறிய செயல் என்பதால், கேப்டனாக செயல்பட்ட வாட்சனுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20, மற்ற வீரர்களுக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த 12 மாத காலத்துக்குள் மீண்டும் இதுபோன்று நடந்தால், ஒரு போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்படும்.

No comments

Powered by Blogger.