Header Ads



'டைட்டானிக்' கப்பல் எப்படி மூழ்கியது..? புதுத் தகவல் வெளியிடும் நிபுணர்கள்


கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்ஆம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு “டைட்டானிக்” என்ற பயணிகள் சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றது. புறப்பட்ட 4 நாளில் அதாவது ஏப்ரல் 14-ந்தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் ராட்சத பனிப்பாறையில் மோதி தண்ணீரில் மூழ்கியது. அதில் பயணம் செய்த சுமார் 1500 பேர் கடலில் மூழ்கி பலியாகினர்.

அக்கப்பல் மூழ்கி தற்போது 100 வருடம் ஆகிறது. இருந்தாலும் அதன் சோக சுவடுகள் இன்னும் மறையவில்லை. அந்த கப்பல் குறித்த தகவல்கள் கதையாகவும், சினிமா படமாகவும் வெளியாகி வருகிறது. மேலும் டைட்டானிக் கப்பல் மூழ்கியது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு சந்திரனின் அதிக ஒளி வீச்சே காரணம் என தெரிய வந்துள்ளது.

1400 ஆண்டுக்கு ஒரு முறை சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும். அப்போது மிக அதிகமான ஒளி வெள்ளத்தை பாய்ச்சும். அதனால் கடல்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி நீர்மட்டம் அதிகரிக்கும்.   அவ்வாறு வீசிய ஒளியினால் தான் அட்லாண்டிக் கடலின் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அளவுக்கு மீறிய வெள்ளம் மோதி உடைந்த கப்பலுக்குள் புகுந்து அது மூழ்க காரணமாக அமைந்துள்ளது என டெக்காஸ் பல்கலைக் கழகத்தின் சர்வதேச நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.