Header Ads



இலங்கையின் பட்டதாரிகள் உலகின் எந்தவிடத்திலும் தொழில்புரிய சிறப்புத் திட்டம்


உலகின் எந்தவொரு இடத்திலும் தொழில் புரியும் வகையில் பட்டதாரிகளை உருவாக்குவதற்குத் தனியார் துறையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள உயர்கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு முதல் செயற்பாட்டு ரீதியான பயிற்சிகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி எந்தவொரு சூழலிலும் பணியாற்றக் கூடிய செயற்பாட்டு இயலுமையுடனான பட்டதாரிகளை உருவாக்குவதே, இதன் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான பட்டதாரிகளை உருவாக்குவது தொடர்பில் உயர்கல்வி அமைச்சர், தனியார் துறையினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கமைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருட பயிற்சிகளை வழங்கத் தனியார் துறையினர் இணங்கியுள்ளதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன கூறினார். 

No comments

Powered by Blogger.