இலங்கைக்கு எதிராக வாக்களித்தவர்கள் - பாதிப்புகளை விரைவில் உணருவார்கள் - ஜனாதிபதி மஹிந்த
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் வாக்களித்தவர்கள் அவர்களது நாட்டில் கொடிகளை உயர்த்திக் கொண்டு பயங்கரவாதிகள் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளை மறந்து செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜெனீவா மனித உரிமை பேரவையில் எமது நாடு கண்ட தோல்வியைக் கண்டு பெரும் மகிழ்ச்சியடைபவர்கள் மக்களல்ல. மாறாக புலி ஆதரவாளர்களும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுமே என தெரிவித்த ஜனாதிபதி, நாம் ஜனநாயகத்தை மதிப்பவர்கள். சகல இன, மத மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு எமக்குள்ளது. அதனை நாம் நிறைவேற்றுவோம்’ எனவும் தெரிவித்தார்.
‘திவி நெகும’ கிராம எழுச்சித் திட்டத்தின் கீழ் ‘ஒரு ஊருக்கு ஒரு திட்டம்’ தேசிய வேலைத்திட்டம் பண்டாரகமையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷனால் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில் :- மூன்று தசாப்த காலமாக இந்த நாட்டைச் சீரழித்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தி அபிவிருத்தியில் நாட்டைக் கட்டியெழுப்பி வரும் வேளையிலேயே நாட்டுக்கு எதிரான அழுத்தத்தை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. நாம் 2005 ஆம் ஆண்டு இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது நாட்டு மக்கள் அபிவிருத்தியையோ வேறு எதையும் எம்மிடம் எதிர்பார்க்கவில்லை. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டைச் சுதந்திரமாக்குமாறே கேட்டனர். அதை நாம் முழுமையாக நிறைவேற்றியுள்ளோம்.
பயங்கரவாதத்திற்குக் கப்பம் வழங்காமல் வெற்றி கொள்ளப்பட்ட யுத்தம் என்பதால் மக்கள் இன்று சுதந்திரமாகவும் கெளரவமாகவும் வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது- இதனூடாக சகல மக்களும் தமது பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையராகிய எம்மை எவரும் அடிமைப்படுத்த முடியாத கெளரவம் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சகல மதங்களும் இனங்களும் அவர்களின் வழிபாடுகள், கலாசார பண்பாடுகளை சுதந்திரமாக அனுபவிக்கும் நிலையைத் தோற்றுவிக்க முடிந்துள்ளது. 2009 மே 18 ஆம் திகதியில் நாம் நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை அழித்த சமயத்தில் நாடு அபிவிருத்தியின்றி, பிரயோசனமின்றி இருந்ததால் பெற்றோர், பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப தயாராகினர்.
இப்போது நாடு அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது- வெளிநாடுகளிலுள்ளோரும் இங்கு வந்து தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு நிவாரணங்களும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இத்தருணத்தில் சில சக்திகள் அவதூறுகளைக் கிளப்பி வருகின்றன. கடந்த காலங்களில் அதிகாரத்திலிருந்து எம்மைக் கடனாளியாக்கியோரே இதைச் செய்கின்றனர்.
இவ்வளவு காலம் வடக்கிற்குப் போகாதவர்கள் ஜெனீவாவில் அமெரிக்கா பிரேரணையை முன்வைத்த பின்னர் வாடக்கிற்குச் சென்று அங்குள்ள மக்கள் மத்தியில் விசமத்தனமாகப் பேசுகின்றனர். வடக்கில் அரசாங்கம் எந்த அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை என அங்கிருந்து குரல் எழுப்புகின்றனர்.
சர்வதேச தமிழர் அமைப்புக்கள், புலி ஆதரவாளர்கள் அமெரிக்காவிக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்காகவே குறுகிய நோக்குடன் இவர்கள் செயற்பட்டனர். எரிபொருள் விலை, சமையல் எரிவாயு விலை, இவை உலக சந்தைகளில் விலை உயரும் போது இங்கும் அதிகரிக்கின்றது. இவற்றை எம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான் நாம் இங்கு எரிபொருள் அகழ்வினை ஆரம்பித்துள்ளோம். எரிவாயு பெற முடியுமா என்ற ஆய்வினை மேற்கொண்டுள்ளோம். இவற்றை எமக்கல்ல எதிர்கால சந்ததியின் சுபீட்சம் கருதியே மேற்கொள்கின்றோம்.
இதற்கெதிராகவும் சதி முயற்சிகள் நடக்கின்றன. சில சக்திகள் மக்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்தப் பார்க்கின்றன. ஜெனீவாவில் நாம் 15 வாக்குகள் பெற்றோம். மேலும் எட்டு நாடுகள் எமது வேலைத்திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. அந்நாடுகள் பாரிய அழுத்தங்கள் காரணமாகவே வாக்களிக்காமல் விட்டன. எமக்கு வாக்களிக்காத நாடுகளுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்துகின்றேன். பயங்கரவாதிகள் அந்த நாடுகளில் கொடிகளை உயர்த்திக் கொண்டு செய்யப் போகும் பாதிப்புகளை அவர்களும் மறந்துவிடக் கூடாது. இது அவர்களுக்குப் பின்னர் புரியும்.
இப்போது புலி ஆதரவாளர்களும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுமே எமது தோல்வியில் மகிழ்ச்சி காண்கின்றனர் என்பதை மக்கள் உணர வேண்டும். இது சுயாதீனமான நாடு. இங்கு அநாவசிய அழுத்தங்களை பிரயோகிக்க எவருக்கும் இடமளிக்க முடியாது.
எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி நாம் கிராம மட்டத்தில் குடும்பங்களை பொருளாதாரத்தில் மேம்படுத்தும் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். இன்று ஆரம்பிக்கப்படும் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற செயற்றிட்டம் நாடளாவிய 14,000 கிராமங்களில் இன்று ஆரம்பிக்கப்படுகிறது. ஒரு திட்டத்திற்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படுகிறது. வரலாற்றில் இதுபோன்ற ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை. இது யாழ், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மதவாச்சி என சகல பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இரோப்பாவில் தனது கூலி ஆட்களய் பாவித்து ஏதாவது நாசவேலய் செய்யப்பார்ப்பார் அதய் புலம்பெயர் THAMIL ம்க்கள் மீது போட்டுவிடுவார் மற்றும் இவருடய்ய உதவிகள் யாவும் அங்கு குடியேற்றிய ரானுவகுடும்பங்களுக்கே போய்சேரும்
ReplyDelete